முழக்கங்கள்

0
682

அடங்க மறு ! அத்து மீறு ! திமிறி எழு ! திருப்பி அடி ! 

மக்கள் விடுதலை மண்டியிட்டுப் பெறுவதல்ல! மடுவை மலையாக்கு! மண்ணைச் சிவப்பாக்கு!

அண்ணலே இனியும் நாங்கள் ஆடுகளல்ல! இளிச்சவாயர் கூட்டமும் அல்ல! சீறிப் பாயும் விடுதலைச் சிறுத்தைகள்.

உன்னைப் படி! தாய் மண்ணைப் பிடி!

படையை பெறுக்கு! தடையை நொறுக்கு!

அடக்க நினைத்திடும் சிறைச்சாலைஅது அரசியல் கற்பிக்கும் பாடச்சாலை!

திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது! திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது!

தலை நிமிர சேரி திரளும்! அன்று தலை கீழாய் நாடு புரளும்!

சேரியில் புரட்சியின் சினை வெடிக்கும் ஆதிக்க வெறிசாதியத்தின் தலை நறுக்கி பகை முடிக்கும்!

படை நடுங்கிட சீறி எழும்பு – நாளைபழி தீர்த்திடும் உன் வீரத்தழும்பு!
நெருக்கடிகள் சூழ்ந்த போதிலும் கொள்கை நெறிப்படி வாழ்தல் வீரம்! நெருப்பலைக்குள் வீழ்ந்த போதும் அடிமை நெறிமீறி பாய்தல் வீரம்!

பாதையில் குறுக்கிடும் தடை மீறு! அதிரடி பாய்ச்சலில் படைத்திடு வரலாறு!

எத்தனைக் காலந்தான் பொறுத்திறுப்பாய் – அடஎழுந்திட வேண்டாமோ எரிநெருப்பாய் !

எம் பதிவுகள் வெறும் கண்ணீர் துளிகளல்லகலகத்தின் சினைகள்!

அச்சம் தவிர்த்து சினந்து கிளம்பு – சாதியின்உச்சந்தலையில் இடியாய் இறங்கு!

ஒரு நாள் நிச்சயம் விடியும் – அதுஉன்னால் மட்டுமே முடியும்!

சேரிப்புயல் ஒரு நாள் வரம்பு மீறும்! வரலாறு மாறும்! ஒப்பாரி ஒலங்கள் சேரிக்கு மட்டுமே சொந்தமில்லை!

பொய் வழக்கும் கொடுஞ்சிறையும் போராளிகளை என்னச் செய்யும்.

கடைசி மனிதனுக்கும் சனநாயகம்! எளியமக்களுக்கும் அதிகாரம்!

SHARE
Previous articleவரலாறு
Next articleஅணிகள்
திருமா.இன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here