வடக்கு அரசியல்வாதிகளையும் திரும்பிப்பார்க்க வைக்கப்போகிறார் திருமாவளவன்!

0
1072

வடக்கு அரசியல்வாதிகளையும்

திரும்பிப்பார்க்க வைக்கப்போகிறார் திருமாவளவன்!

  • பாவலர் அ றி வு ம தி

 

நீண்ட நீண்ட நெடுங்கால வலிகளுக்கு…. வலியெடுத்து… ஒரு வரலாறு பிறந்தது.  அந்த வரலாற்றுக்கு பெயர்தான் அண்ணல் அம்பேத்கர்.

இந்த வரலாற்று நாள் என்பது அண்ணல் அபேத்கரின் பிறந்த நாள் மட்டுமல்ல… அடிநிலை மக்களின்  விடுதலை உணர்வுகளை எழுப்பி விடுகிற உணர்ச்சிகரமான நாள் என்பதை மறுந்துவிடாதீர்கள்.

அண்ணல் அம்பேத்கரின்…   நிகழ் அடையாளமாக  தொல்.திருமாவளவன் கிடைத்திருக்கிறார். இந்த அடை யாளத்தின் விரல்பிடித்து நடக்கத் தவறினால் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக.. ஏகாதி பத்தியவாதிகள் மட்டுமல்ல.. இங்குள்ள தமிழர்களிலே கூட சிலர்  உங்களைக் குனியச் சொல்லி முதுகில் ஏறி உப்புகட்டி வருவார்கள்.

இங்கே… என் அன்புத் தங்கை தஞ்சை சின்னப்பொண்ணு பாடிய போது, பறையடித்தார்கள், பறை என்பது இன்றைக்கு சாதி அடை யாளம். சங்க இலக்கிய காலத்தில் பறை நமது இன அடையாளம்.  இண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே… மாங்குடி கிழார் என்கிற புலவர் பாடுகிறார்..

குரவு, தளவு, குருந்தம், முல்லை என்கிற இந்த பூக்களைத் தவிர வேறு சிறந்த பூக்கள் இல்லை. வரகு, தினை, மொச்சை, கொள் இந்த உணவுப் பொருள்களைத் தவிர வேறு சிறந்த உணவுப் பொருள்கள் இல்லை. துடியன், பாணன், பறையன், கடம்பன் இந்தக் குடிகளைத் தவிர வேறு சிறந்த குடிகள் இல்லை. எனவே, பறையர் என்கிற சொல் சங்க இலக்கியத்தில் இன அடையாளத்தின் விழுமியச் சொல். ஒரு அய்க்கூ எழுதியிருந்தேன்.. இப்படி..

“எல்லோருக்கும் விபத்து மயிரிழையில் நடக்கும்!

தமிழனுக்கு மட்டும் நூலிழையில்!”

அந்த நூலிழையின் சோகத்தைத் தான் நாம் இன்றுவரை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்தச் சோகங்களிலிருந்து கரையேற்ற நமக்குக் கிடைத்திருப்பவர்தான் திருமாவளவன்.

மன்சூர் அலிகான் அவர்கள் பேசுகிறபோதுகூட… தன்னுடைய படத்தில் நம்முடைய தலைவரை நடிக்க வைத்திருக்கிறேன் என்றார்.

நடிப்பு யாருக்குச் சொந்தம்?

இசை யாருக்குச் சொந்தம்? ஆடல் யாருக்குச் சொந்தம்? எவர் வயல்வெளிகளில் குனிந்து நிமிர் கிறாரோ அவருக்குச் சொந்தம். இங்கே நூற்றுக்குத் தொன்னூறுபேர் நடவு நடுவதற்குக் குனிவது யார்? நமது தாய்கள்! எவன் பாறை உடைக்கிறான்? நமது தந்தைகள்!

எனவே, கலைகள் அத்தனையும் நம்முடைய கால்களில் வந்து மண்டி யிட்டு நன்றிசொல்ல வேண்டும்! ஆனால், ஒரு காலகட்டத்தில் கலைகளின் மீது நமக்கொரு தவறான மதிப்பீடு வந்தது. உனக்குப் பாடத் தெரியுமா? தெரியாது. உனக்கு ஆடத் தெரியுமா? தெரியாது.

இப்படிக் கூச்சப்பட்டு… தெரியாது தெரியாது என்று சொல்லிக் கொண்டிருந்த பழக்கத்தை உடைத்து.. வடக்கே இருந்தவர்களை யெல்லாம் தெற்கே.. தம் பாடல்களால் திரும்பிப் பார்க்க வைத்தவர்.. இசைஞானி இளையராஜா. குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வெகுவிரைவில்.. வடக்கு அரசியல்வாதிகளைத் தெற்கே திரும்பிப் பார்க்க  வைக்கப் போகிற தலைவர் திருமாவளவன். இது ஏதோ உணர்ச்சிவசப்பட்டு சொல்கிற சொல்லாக கருதி விடாதீர்கள்.

அடிநிலை மக்களிலிருந்து அனைத்து மக்களுக்குமான  தாய்மையோடு  எந்தத் தலைமை அரசியலுக்கு வருகிறதோ… அந்தத் தலைமைதான் ஓர் இனத்திற்கான ஒழுங்கான தலைமையாக இருக்க முடியும். அதற்குச் சான்றாக தலைவர் திருமா இருக்கிறார்.

நான்கைந்து அடுக்குகளாக ஒருவர் தோளில் ஒருவராக  ஏறி அமர்ந்திருந்த சமுதாய அடுக்கு களில்… ஒருவர் தோளிலிருந்து ஒருவராக இறக்கிவிடப்பட்ட சூழலில்… கடைசித் தோளில் அமர்ந் திருப்பவர்களைப் பார்த்து… உங்கள் தோள்களிலிருந்தவர்களையெல்லாம் இறங்கச் சொன்னீர்களே… எங்கள் தோள்களிலிருந்து நீங்களும் இறங்கிவிட்டால்.. ஒருவர் தோளில்.. ஒருவர் கைபோட்டுக் கொள்ளலாமே என்று கூறுகிற காலகட்டத்தின் வரலாற்று அடையாளம்தான் தொல்.திருமா. இதற்கான வரலாற்று நிகழ்வாகத்தான்  அண்ணன் பிரபா கல்விமணி அவர்களுக்கு  தலைவர் தொல்.திருமா அவர்களால் வழங்கப் படுகிற இந்த ‘அம்பேத்கர் சுடர்’!

என்னுடைய அண்ணன் இன்றைக்குக் கவின் கல்லூரியின் முதல்வராயிருக்கிற வரலாற்று ஓவியன் சந்துரு அவர்கள் அiடாளப்படுத்தியிருக்கிற அந்த இரண்டு கைகள் இணைதல்.

இவை இரண்டு கைகள் அல்ல. எங்களுடை திருமா.. எங்களுடைய தலைவர்.. தமக்குள் ஆயிரம் தாய்கள் இருக்கிறார்கள் என்று அடையாளப்படுத்துகிற நிகழ்ச்சி இது.

உதைத்த மகனின் காலை வாங்கி… அழுக்கேறிய மஞ்சள் கயிற்றி லிருந்து ஊக்கெடுத்து முள் களைந்து விடுவாளே.. அந்த உழைக்கும்  தாயின் உள்ளன்போடுதான்… திருமா அவர்கள் அண்ணன் கல்யாணி அவர்களை இங்கே  கௌரவித் திருக்கிறார். கல்யாணி அவர்களின் கால் உதைத்த கால் அல்ல.. அடிநிலை மக்களுக்காகவே அல்லும் பகலும் உழைத்த கால்! ஓராயிரம் முட்கள் காலில் குத்திய போதும் அதனைக் களைய நினைக் காமல்… அடிநிலை மக்களின் அவலங்களைக் களையத் துடித்தவர் அண்ணன் கல்யாணி! அவரோடு மட்டுமா திருமா கை குலுக்குகிறார்!

கடல் தமிழர்கள் வலியா? உடனே அவர்களுக்காகப் போய் கை கொடுக்கிறார். தமிழ் வணிகர்களு டைய வலியா? உடனே அண்ணன் வெள்ளையனோடு போய் கை கொடுக்கிறார்.

அதைப்போலவே, ஈழத்துப் பெருங்கவிஞர் அண்ணன் காசி ஆனந்தன், அண்ணன்கள் ஓவியர் சந்தானம்,  சோழ நம்பியார் ஆகிய ரோடு நானும் திண்டிவனம் சென்று  மருத்துவர் அய்யாவைச் சந்தித் தோம். இரண்டு சமுதாய இணைவிற்காக நீங்களும், தொல்.திருமாவும் கைகோர்த்தால் தமிழினம் பாதி  ஒன்று சேர்ந்ததுபோல் ஆகிவிடுமே என்று சொன்னோம்.

உடனே, எவ்வித மறுப்பும் கூறாமல்.. நீங்கள்  சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். அந்த இயக்கத் திற்குத் தம்பியே தலைமையேற் கட்டும். அதன் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்றார். இன்று பிரபா கல்விமணி அவர்களோடும் தலைவர் திருமா… கைகோர்த்திருக் கிறார்… இனி இந்தத் தமிழினத்திற் குள் எல்லோரும் கைகொடுத்துக் கொள்வோம்.

ஆனால், கறுப்பாக இருக்கிறான் என்பதற்காக எந்த நடிகனையும் நமது வீதிகளில் நுழைய விட்டு விடாதீர்கள். நீயும் கறுப்பு நானும் கறுப்பு நாட்டைக்கொடு என்று ஏய்க்க வருகிற எந்த நடிகனையும் நேருக்கு நேர் நிற்க வைத்துச் சொல்லுங்கள்.. பிழைக்க வந்த கறுப்பன்களே.. உங்கள் கறுப்பைவிட இந்த மண்ணில் பிறந்து வளர்ந்த எங்கள் தலைவரின் கறுப்பு அழகிலும் அழகடா என்று சொல்லுங்கள்.

நமது வீதிகளில் இருக்கிற நடிகர்களுக்கான இரசிகர் மன்றங் களைக் கலையுங்கள். அவற்றை அம்பேத்கர் படிப்பகங்களாக.. திருமாவளவன் படிப்பகங்களாக மாற்றுங்கள்.

இளைஞர்கள் விழிக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் வெல்ல வேண்டும். அதற்காகக் கிடைத்திருக் கிற தலைவர்தான் திருமாவளவன். அவரைப் பாதுகாக்க வேண்டியதும் அவரைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதும் உங்கள் கடமை.

அண்ணன் கல்யாணி அவர் களிடம் விருதோடு அய்ம்பதாயிரம் தொகையும் தரப்போகிறேன் என்று கடல் தமிழர்களுக்கான  போராட்ட நாளில் அறிவித்தபோதே… அய்யா கந்தசாமி அவர்கள் இங்கு சொன்னது போலவே நினைத்தேன்.. இது தாய்த் தமிழ்ப் பிள்ளை களுக்கே பயன்படப்  போகிறது என்று!

அப்படித்தான் அங்கே தமிழீழத் திலே… ஒரு தலைவர் இருக்கிறார். இவர் பிரபா. அவர் பிரபாகரன்.

படித்த செய்தியொன்று.. களத்திலே  உக்கிரமாகப் போர் நடந்துக் கொண்டிருக்கிறது. உச்சி வெயில். அந்த நேரத்தில் தலை வரோடு நான்கைந்து தளபதிகளும் நிற்கிறார்களாம். அந்த நேரத்தில் அடித்துப்பிடித்த சிங்கள இராணுவ முகாமிலிருந்து அடுக்கடுக்காய்க் கொண்டுவந்த குளிர்பானங்களை அடுக்குகிறார்கள்.

அவரைப் போலவே.. அடிநிலை மக்களுக்காக அப்பழுக்கற்ற நிலையில் உழைக்கும்.. போராடும் அண்ணன்தான் பிரபா. கல்விமணி அவர்கள்.

அய்யா நெடுமாறன் அவர்களோடு நாங்கள் தமிழ்நாடு நெடுக சுற்றுப்பயணம் சென்ற நாட்களில் அண்ணன் கல்யாணி அவர்களின் பண்பாட்டை.. நேர்மையை  போராட்ட உணர்வை அருகில் இருந்து அறிந்தவன் நான். இந்தத் தூயமனிதரின் மனித நேயம்தான் இன்று தலைவர் தொல்.திருமா அவர்களால் இங்கே மரியாதை செய்யப்படுகிறது, அடையாளப்படுத்தப்படுகிறது.

அய்யா பெரியாரைப் போல… கர்மவீரர் காமராசரைப் போல கொச்சையாகப் பேசுகிற தூய அரசியல்வாதி கல்யாணி அவர்கள். இத்தகையோரைத் தேடித்தேடி இன்னும் வளர்த்தெடுப்போம். அடை யாளப்படுத்துவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here