நரிகளுக்கு நடுவே ஒரு சிறுத்தை!

0
630

நரிகளுக்கு நடுவே
ஒரு சிறுத்தை
o
அம்பேத்கரின் தொடர்ச்சி
பெரியாரின் நீட்சி
ஒடுக்கப்பட்ட மக்களின்
ஒற்றைப் போர்வாள்!
o
நரிகளுக்கு நடுவே
ஒரு சிறுத்தை!
நந்தனை எரித்த
வஞ்சத் தீ
வெண்மணியில் எரிந்த
வன்மத் தீ
மேலவளவில்
மூண்ட சாதீ
அத்தனை தீயையையும்
அணைக்க வந்த
தொல் தீ
நீ வாழும் நொடி ஒவ்வொன்றும்
வரலாறாக…

கவிஞர் நா.முத்துகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here