நீ காவியமாக வாழ்வாய்; காவிகளை எல்லாம் வெல்வாய்!

0
1156
image description

நீ காவியமாக வாழ்வாய்;

காவிகளை எல்லாம் வெல்வாய்!

 

உனது பேச்சுத் தமிழுக்கு

அழகு சேர்க்கிறது.

உனது வாதங்கள்,

பேச்சுகள், எழுத்துக்கள்

சுரண்டல் கும்பலுக்குக்

கிலி, பலி இயந்திரம்.

ஒடுக்கப்பட்ட மக்கள் போராவடு கூட

சமாதானத்திற்காகத்தான்

ஒரு பக்கம் நீ போராளி

மறுபக்கம் நீ சமாதானத்தின்

பரிமாணம்.

o

வன்முறை என்பது தடி,

துப்பாக்கியால் தாக்குவது

மட்டுமன்று, கருத்து ரீதியாக,

கலாச்சார நீதியாக திரித்து

எழுதுவதும், திணிப்பதும் வன்முறைதான்

தற்காப்புக் தாக்கு என்று

சொல்வடி எப்படி வன்முறையாகும்?

நீ விடுதலையைப் போகிக்கிறாய்.

உன்னை எப்படி வன்முறைவாதி

என்பது? நீயோ

விடுதலைப் போராளி!

o

நீ காகிதப் புரட்சியாளர்களிடையே

காலத்தை வெல்லும் புரட்சியாளனாக

வளர்ந்து வருகிறாய்.

நீ காவியமாக வாழ்வாய்.

காவிகளை எல்லாம் வெல்வாய்.

இந்துத்துவத்தை வேரறுப்பாய்.

o

சில மனிதர்களும், இயக்கங்களும்

சாதியை வைத்துக் கொண்டே

சாதி இல்லை என்கிறார்கள்.

சாதி இருக்கிறதே என்று

ஒழிக்க, நீ வழி தேடுகிறாய்.

ஆனாலும் உன்னை

சாதி வெறயன் என்கிறார்கள்.

‘சாதிச் சண்டையால் இரத்தம் சிந்தக் கூடாது.

தமிழ்ச் சமூகத்தை காப்பதற்காகவே

இனி, இரத்தம்

சிந்தப்பட வேண்டும்’

என்ற உனது அறிவிப்பு,

நல்லெண்ணத்தை

உணர்த்தும் அறிவிப்பு.

பெண் விடுதலைக்கும்,

சாதிய ஒழிப்பிற்கும், சமூக

விடுதலைக்கும்

வலு சேர்க்கும் உன் குறிப்பு.

o

நீயே போதும்,

தமிழ்ப் பகைவர்களை அழிக்க!

நீ தமிழிய தலைவர்களோடு

கைகோர்க்கும் நேர்த்தி,

எதிரிகளைச் சண்டையிடாமலேயே

சரணடைய வைக்கும் உத்தி.

காலங்காலமாய்

ஏழ்மையால், வறுமையால்,

பிள்ளைகள் வயிற்றுக்கும்,

தன் வயிற்றுக்குமாய்

கூனி நின்ற பெரியோரின் மனதை

நிமிர்த்த நினைத்தாய்.

திமிறி எழு, திருப்பி அடி,

அடங்க மறு, அத்து மீறு

என்று மனமருந்திட்டாய்.

அடிபடும்போதுதான்

வலியை உணர்வார்கள்.

அதனால்தான் அடித்தால் திருப்பி

அடி என்று போதித்தாயோ?

கூனி நின்றவர்கள் இன்று

நிமிர்ந்து நிற்கிறார்கள்.

திமிர நினைக்கும் இளைஞர்கள்,

வீரத்தின் விளை நிலமாய்

உன்னைப் பார்க்கிறார்கள்.

நீ மனோதத்துவம் படிக்காத

மாமருத்துவன்.

o

அணுகுண்டை வைத்துக்

கொண்டிருக்கும் அமெரிக்கா,

நீ அணுக்குண்டை

வைத்துக் கொள்ளாதே,.

அது பேரழிவு ஆயுதம்’

என்று கூறுவது போல-

ஆட்டுக்குட்டியைப் பார்த்து

ஆற்றைக் கலக்குகிறாய்

என்று புலி குற்றம் சுமத்தும்!

இதன் நோக்கம்

அதை அடித்துத் தின்பதுதான்.

சனநாயக வழியில் குற்றம் சுமத்தி

அடித்துச் சாப்பிடத்தான்

அப்படியொரு நாடகம்.

அடித்தட்டு மக்களை  அடித்துச்

சாப்பிடுபவர்கள் தாம்,

திமிற நினைக்கும் மக்களை

‘அய்யோ, இது சனநாயகமா?

இது வன்முறையாச்சே!’

என்று அலறித் துடிக்கிறார்கள்.

இப்படித்தான் தமிழ்நாட்டிலே,

தமிழுக்காக, தமிழருக்காக

பேசுவது சிலருக்கு

தீவிரவாதமாக தெரிகிறது.

 

நீ உண்மை உடையவர்களைச்

சார்ந்து நிற்கிறாய், விடுதலைக்கு

ஏங்குபவர்களுக்காக

போராடுகிறாய்.

அதனால் பலம் பெறுகிறாய்.

o

எப்படி நித்தமும்

இத்தனைக் கூட்டம்?

அவர்கள் நினைப்பில்

நீ இருக்கிறாய்,

அவர்கள் நினைப்பதை

நீ சொல்கிறாய்,

தொண்டர்களின் தொண்டனாய்

நிற்கிறாய்,

மக்களிடம் தலைவனாய்

வளர்கிறாய்.

தொண்டர்கள் உன்னிடம்

உரிமையோடு வாதிடுகிறார்கள்,

சிலர் சண்டையுடுமிடுகிறார்கள்.

‘மற்ற தலைவர்களிடம்

முடியுமா இப்படி’?

o

மற்றவர்களுக்கு மயங்காத நான்,

உனக்கு மயங்குகிறேன்.

அப்படி என்ன இருக்கிறது

உன்னிடத்தில்?

இந்த மயக்கமே உன்னிடத்தில்

என்னைத் தொடர்ந்து நிறுத்தும்,

அதனால் இந்த மயக்கம் அப்படியே

இருந்துவிட்டு போகட்டும்.

o

சாதி சமயம் துறந்திட,

மொழி பண்பாடு காத்திட,

சனநாயகம் சமத்துவம் பெற்றிட,

நீங்கள் தொடங்கி உள்ள

நெடும் பயணத்தில் – துரும்பாய்,

துடுப்பாய், சுடும் கருவியாய்

என்னை நீங்கள் பயன்படுத்த

ஒப்புதல் அளிக்கிறேன்,

உங்கள் பிறந்த நாளில்.

நீவீர், மார்க்சாய், மாவோவாய்,

பெடரல் காஸ்ட்ரோலாய்

தம்பிக்குத் தம்பியாய்,

தந்தையின் ஆயுதமாய்,

அண்ணலின் உள் மனதாய்,

செயலாற்றிட, புகழ் பெற்றிட

நெஞ்சார, உணர்வு பூர்வமாக

வாழ்த்துகிறேன்…

 

க. சோ ழ ந ம் பி யா ர்

ஒருங்கிணைப்பாளர் – தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here