திருமா எங்கள் தேசம்…

0
777

திருமா எங்கள் தேசம்…
பேராசிரியர் அரச.முருகுபாண்டியன்

பார்ப்பனியம்
உழைப்பவன் அறிவை செல்லறித்தது
நீயோ
புத்துயிர் அளித்த புத்தன்…

o

இந்து மதம்
இந்த நாட்டை சுடுகாடாக்கியது
நீயோ
இந்துத்துவ இருள் ஒழித்து
மருதமாக்கிய அம்பேத்கர்!

o

சாதிகளால்
தமிழ்த்தேசியம் தரைதட்டிப்போனது
நீயோ
பகுத்தறிவால் கரைசேர்த்த பெரியார்!

o

திராவிடம் பேசிய நாவுகளில்
பார்ப்பனியத்தின்
நயவஞ்சகங்கள்
நீயோ தோலுரித்த பெருஞ்சித்திரனார்!

o

செங்கொடியின் உள்ளே
உறைந்து கிடந்தது
வருணாசிரமத்தின் காவிக்கரை
நீயோ
அதை மீட்டெடுத்த மாவோ…

o

இருள்
கவ்விக் கிடந்தது சேரி!
நீயோ
தமிழின உணர்வூட்டி
வெளிச்சம் பாய்ச்சிய
அயோத்திதாசப் பண்டிதர்!

o

அறிவின் சேர்க்கை நீ!
போராட்ட எரிமலை நீ!
முறுக்கிய மீசையும்
முருவலிக்கும் புன்னகையில்
இரட்டைமலை சீனிவாசன் நீ!

o

தமிழனை
தமிழனுக்கு உணர்த்திய
வாழும் வள்ளுவரே!
உனக்குள்
கருக்கொண்டிருக்கிற உணர்வே
எமக்கு விடுதலை!
உனது பிறந்த நாள்
சேரிகளின்
விடுதலை நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here