சிறுத்தைகளும் களமாடட்டும்…

0
515

தைத்துப் போட்ட சட்டையும்
நைந்து போன டவுசரும்
நொந்து கிடந்த வாழ்வும்
உன் சிலேட்டில் சிற்பமாய்…

o

கூனிக் கிடந்த குடிசையும்
குருதி சிந்திய சேரியும்
ஈரம் பார்த்த இமைகளும்
உன் சுவட்டில் ஓவியமாய்…

o

ஏடுகள் புரட்டிய இதயமும்
எழுதித் தேய்ந்த விரலும்
எண்ணிலடங்கா களமும்
உன் தூவலில் தூரிகையாய்…

o

பனை ஓலை முற்றத்தில்
பாடம் பயின்ற நீ..
மாடி வீட்டையா
உன் மனதறியும்

o

சாணம் தெளித்து
திண்ணை கழுவும்
சரித்திரக் குடிசைக்குள்
சாதீ கழுவப்படட்டும்

o

எத்தனைச் சேரிகள்
சேர்ந்து எரிந்தன
அத்தனை குடில்களும்
அழுதழுதே அணைத்தன

o

சாதிக்கப் பிறந்தவனே
சாதியும் சாம்பலாகட்டும்
தமிழ்த்தேசம் காப்பவனே
சிறுத்தைகளும் களமாடட்டும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here