நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை

0
411

நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை
கடவுளின் பெயரால் அடக்குமுறையை
அநியாயம் செய்பவருக்கு எதிரானவன்
– தலைவர் தொல்.திருமா
………

சென்னை மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் மாபெரும் மீலாது மாநாடு சென்னை எழும்பூரில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டார் அப்போது பேசிய அவர், விடுதலை சிறுத்தைகளுக்கு இஸ்லாமியர்கள் எப்போதும் எனக்கு உற்ற துணையாக இருப்பீர்கள் என்று கூறிய வார்த்தை எனக்கு உந்து சக்தியாக இருக்கிறது.

இது நான் நபிகள் நாயகத்திடம் கற்றுக்கொண்டது இதுவே நான் கடவுளை தவிர மற்ற எவருக்கும் பயப்படுவதில்லை என்று கூறினார்.

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக தொல் திருமாவளவன் நடந்து கொண்டிருக்கிறார் எனவே அவரை ஒழித்து கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இவர்கள் இவ்வாறு அவதூறு செய்கிறார்கள் என்ற அவர் விசிக என்பது ஒரு இஸ்லாமிய கட்சியே என்று கூறினார்.

அம்பேத்கர் சட்டம் எழுத உறுதுணையாக இருந்த இஸ்லாமிய சமூகத்தோடு இணக்கமான உறவு வைத்துக்கொள்வது என்ன தவறுஉள்ளது என்று கேள்வியெழுப்பினார்.

இஸ்லாமிய பிரியணிக்காக திருமாவளவன் பேசுகிறார் என்று பலர் கூறுகிறார்கள் ஆனால் நான் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி 17 ஆண்டுகள் ஆகிறது என்பது அவர்களுக்கு தெரியாது என்ற அவர் அவர்கள் என்னசொன்னலும் எனக்கு கவலை இல்லை காரணம் நான் இஸ்லாமிய சமூகத்தை, சிறுபான்மையின சமூகத்தை அளவுகடந்த நேசிக்கிறேன் என்றார்.

அன்று ஆட்சியை எதிர்த்து , அடக்குமுறையை எதிர்த்து, ஆளுமைகளை எதிர்த்து போராடியவர் நபிகள் நாயகம் என்று கூறிய அவர் இந்த அநீதிகளை வீழ்த்தி ஆட்சியை பிடித்தார் நபிகள் என்றும் கூறினார்.

நபிகள் நாயகம் சமத்துவ மலர அரும்பாடு பட்டவர். எனவே அவரது இறுதி பெருரையில் ஒரு தேசிய இனத்தை விட மற்றொரு தேசிய இனம் பெரிதாக இருக்கமுடியாது என்றும் ஆக ஒரு மனிதனை விட மற்றொரு மனிதன் பெரியவனாக இருக்க முடியாது எனவே அனைவரும் சம்ம என்றும் எல்லாவற்றிற்கும் பெரியவன் கடவுள் ஒருவரே என்றும் நபிகள் கூறி உள்ளதை மேற்கோள் காட்டினார்.

மேலும் நபிகள் நாயகம் சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்றும் அதனால் தான் இறைவன் என்பவன் உறுவமில்லா ஒர் இறை என்று கூறியிருக்கிறார் என்று சுட்டிக்காட்டினார்.

இஸ்லாம் என்பது மானுட சமத்துவத்தை பேசுகிறது எனவே இதில் தலைவன் என்பவன் உருவாக முடியாது உருவம் பெற்ற இறைவர் இருக்க முடியாது என்றார். அதே போன்று தலைவன் என்பவன் தனக்கான போட்டியாக யாரையும் நினைக்கக்கூடாது. இதை இவர்களின் தொழுகையில் காணலாம் அனைவரும் சாமம் என்ற நிலையில் இது இருக்கும்.

தலைவராக சுயலாளமாக நடந்துகொள்வதே பாபர் மசூதி இடிப்பு நமக்கு எடுத்துக்காட்டுக்குறது.

நான் இந்த்துக்கு எதிரானவன் இல்லை கடவுளின் பெயரால் அடக்குமுறையை அநியாயம் செய்பவருக்கு எதிரானவன் அதனாலே தான் இலங்களியில் அனைத்து இந்து கோயில்களும் இடிக்கப்பட்டு புத்த விகாரங்களாக கட்டிய ராஜாபக்ஷேவை எதிர்தேன். ஆனால் அப்போது இவர்கள் ஏன் பொங்கி எழ வில்லை என்றால் இங்கு மட்டுமே இவர்கள் அரசியல் செய்ய முடியும் எனவே இவர்கள் அரசியை நோக்கத்திற்காக மட்டுமே இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here