ஆதிக்கத்திற்கு எதிராக அணிதிரள்வோம் – தொல். திருமாவளவன்

0
711

 

மஹாராஷ்டிர மாநிலத்தில், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பீமா நதிக்கரையில் பேஷ்வா பிராமணர் படையை வீழ்த்தியது மகர்கள் எனப்படும் தலித்துகள் படை. இந்த யுத்த வெற்றி நினைவுச் சின்னம் பீமா கோரேகானில் அமைக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் அந்த நினைவிடத்தில் படைவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவருகின்றனர்.

அந்த வகையில், இந்த வருடமும் பீமா கோரேகான் நினைவு சின்னத்தில் லட்சக்கணக்கான தலித்துகள் திரண்டு மகர் படையினருக்கு வீரவணக்கம் செலுத்தினர். இதை தேசவிரோதம் என கூறி இந்துத்துவா குழுக்கள் தலித் மக்களின் மீது தாக்குதல் நடத்தின. இதில் தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தினால் மஹாராஷ்டிராவில் கடுமையான போராட்டத்தினை முன்னெடுத்தனர் சனநாயக சக்திகள்.

இந்நிலையில், மராட்டியத்தில் தலித் மக்கள் மீது சாதிவெறியாட்டத்தினை நடத்திய இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன். அப்போது, அவர் பேசியதாவது, “இந்துத்துவ அமைப்பான பாஜக மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது முதலே சமூகத்தில் ஏழை – எளிய ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் முடுக்கிவிடப்படுகின்றன. இத்தகைய சம்பவங்களை விசிக சார்பில் கடுமையாக கண்டிப்பதுடன், ஆதிக்கமானது எந்த வடிவில் நம்மீது நிகழ்த்தப்பட்டாலும் அதனை முறியடிக்க அணி திரள்வோம்” என உரையாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here