காஞ்சி சங்கராச்சாரியார் மறைவு விடுதலைச் சிறுத்தைகள் இரங்கல்

0
394

காஞ்சி சங்கராச்சாரியார் திரு.ஜெயேந்திரர் அவர்கள் திடீரென காலமானார் என்ற செய்தியறிந்து வருந்துகிறோம். அவரது மறைவால் வாடும் சங்கர மடத்தினருக்கும் அவர்மீது மதிப்பும் நம்பிக்கையும் கொண்ட இந்துக்களுக்கும் பக்தர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்திலிருந்து இடம் பெயர்ந்து காஞ்சிபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் துவங்கிய சங்கர மடம் சைவ சமய கருத்தியல் மையங்களில் ஒன்றாக இருந்தது. பாபர் மசூதி இடிப்புப் பிரச்சனைக்குப் பிறகு நாடு முழுவதும் எழுந்த இந்துத்துவ பேரலையை ஒட்டி அதை ஒரு அரசியல் மையமாகவும் மாற்றியவர் திரு.ஜெயந்திரர் அவர்கள் ஆவார். அதன் காரணமாக சங்கரமடம் பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளானது.

ஆனால் அண்மைக்காலமாக திரு.ஜெயேந்திரர் அவர்கள் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் இருந்து சற்று விலகியே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில்,சில நாட்களுக்கு முன்னால் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் நலமடைந்து திரும்பியதாகச் செய்தி வெளியானது. ஆனாலும் தற்போது அவரது மறைவு செய்தி வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவருக்கு எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

இவண்:
தொல்.திருமாவளவன்
நிறுவனர் – தலைவர்,
விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here