விளம்பர நிறுவனங்களுக்கு உரிமம் அளிப்பதில் முறைகேடா?

0
100
விளம்பர நிறுவனங்களுக்கு உரிமம் அளிப்பதில் முறைகேடா?
தமிழக முதல்வர் தலையிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்
~~~~~~~~~

சென்னை பெருநகர் பகுதியிலும் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் விளம்பர போர்டுகளை அமைக்கும் தொழிலில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஈடுப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் ஒன்றிணைந்து சங்கம் ஒன்றினையும் வைத்துள்ளன. அவற்றின் சார்பில் விளம்பர போர்டுகளை சென்னை பெருநகரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய பகுதிகளில் நிறுவுவதற்கு தமிழக அரசிடம் உரிமம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 18 மாதங்களாக அவர்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை. இந்த விளம்பர போர்டுகள் வைக்கும் தொழிலில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.

சென்னை பெருநகரம், காஞ்சிபுரம் பகுதிகளில் பேருந்து நிழற்குடைகளில் விளம்பரம் செய்வதற்கு ஸ்கை ராம் அவுட்டோர்ஸ், ஷைன் அவுட்டோர்ஸ், பைன் ஆர்ட்ஸ் கம்யூனிகேசன்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தனியார் விளம்பர போர்டுகளுக்கு உரிமம்  வழங்கப்பட்டால் பேருந்து நிழற்குடைகளில் விளம்பரம் செய்வோரின் வருமானம் பாதிக்கப்படும் என்பதால் தான் தங்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை என ‘அவுட்டோர் அட்வேர்டைசிங் அசோசியேசன்’ புகார் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனையில் தமிழக அமைச்சர் ஒருவர் தலையிட்டு இருப்பதாகவும் அது குற்றம்சாட்டியுள்ளது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்த குற்றச்சாட்டில் உண்மை ஏதேனும் உள்ளதா?  என்று கண்டறிவதோடு தனியார்  விளம்பர நிறுவனங்களின் உரிமங்களைப் புதுப்பித்து அதை நம்பியுள்ள தொழிலாளர்களைக் காப்பற்ற வேண்டுமென வலியுறுத்திக்  கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
தொல்.திருமாவளவன்.

நிறுவனர் – தலைவர்,
விசிக.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here