கச்சநத்தம்: படுகொலை செய்யப்பட்டோர் உடல்களுக்கு திருமாவளவன் அஞ்சலி

0
746

கச்சநத்தம் கிராமத்தில் பட்டியல் இனத்தவர்களின் பகுதியில் நுழைந்த மாற்று சாதியைச் சேர்ந்த சுமார் 50 பேர், அங்கிருந்தவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்தவர்களை வெட்டிச் சாய்த்துள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் துடிதுடிக்கக் கொல்லப்பட்டார். சண்முகநாதன் என்பவர், மதுரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சில மணி நேரத்தில் இறந்துவிட்டார். இந்தத் தாக்குதலில் சிகிச்சைப் பெற்றுவந்த ஆறு பேரில் சந்திரசேகர் என்கிற இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துவிட்டார். இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு, டீ கடையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்ததே காரணம் என்றும், அந்தப் பகுதியிலிருந்து அந்த மக்களை வெளியேற்றும் சதியாகவும் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து கச்சநத்தம் ஊர்மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் கடந்த 4 நாட்களாக ஈடுபட்டனர்.

இவர்களின் உடல்கள், மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. உடல்களை வாங்க மறுத்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் கடந்த 3 நாள்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் இன்றும் பிற்பகல் வரை தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்று சமூக விரோதிகளுக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தியதுடன், படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here