பனைமரம் வளர்ப்போம் – தமிழர் பாரம்பரியம் காப்போம்!

0
199

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர்
தொல்.திருமாவளவன் அவர்கள் தனது பிறந்தநாளான ஆகத்து 17 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல லட்சம் பனை விதைகளை விதைத்து பனை மரங்களை உருவாக்குவோம்
என்று அறிவித்திருக்கிறார். அத்துடன் நில்லாமல் கடந்த நான்கு நாட்களாக அவரே திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பனை விதைகளை தொல்.திருமாவளவன் சேகரித்தார். அப்படி சேகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விதைகளை இரண்டை விடுதலைச் சிறுத்தைகள்
கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் விதைத்தார்.

சேகரிக்கப்பட்ட விதைகளை 14.8.2018 அன்று கீழ்கட்டளை ஏரிகரையிலும், திருநீர்மலை பகுதியிலும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன்  தானே குழித்தோண்டி பனைவிதைகளை விதைத்தார்.

பனைமரம் வளர்ப்போம் – தமிழர்
பாரம்பரியம் காப்போம்!

என்று அறிவித்து எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்
மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சியால் ஆகத்து 17 அன்று தமிழகம் முழுவதும் பலலட்சம் பனைமரங்கள் உருவாக்கப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here