திரு.சோம்நாத் சாட்டர்ஜி மறைவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரங்கல்

0
347
தலைசிறந்த பாராளுமன்றவாதி திரு.சோம்நாத் சாட்டர்ஜி மறைவு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரங்கல்
~~~~~~~~~~~~~~~
தலைசிறந்த பாராளுமன்றவாதியும் முன்னாள் மக்களவைத் தலைவருமான திரு.சோம்நாத் சாட்டர்ஜி மறைவெய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியடைகிறோம். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கத்தையும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்
திரு.சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் பத்து முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் நாற்பது ஆண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்தவர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004ல் ஆட்சியமைத்த போது மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்தாண்டு காலம் சிறப்பாகப் பணிபுரிந்தவர். பாராளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கு அவர் சபாநாயகராக இருந்த காலத்தில் மேற்கொண்ட பல நிலைப்பாடுகள் மற்றும் அளித்த தீர்ப்புகள் உதவியாக இருக்கின்றன.
பெரிய கட்சி ,சிறிய கட்சி என்ற பேதம் இல்லாமல் அவையில் பேச அனைவவருக்கும் வாய்ப்பை அளித்தவர். இந்திய ஜனநாயக அமைப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்துக்கே முதன்மையான அதிகாரம் உள்ளது என்பதை ஆணித்தரமாக நிறுவியவர். பாராளுமன்ற அதிகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்று தலையிட்ட போது அதை எதிர்த்து  அது குறித்து குடியரசுத் தலைவரின் கருத்தை பெற்றவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவராக இருந்த திரு.சோம்நாத் சாட்டர்ஜி 2008ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். எனினும் தொடர்ந்து மதச்சார்பின்மையை வலியுறுத்தும் ஒரு மார்க்சியராகவே அவர்
வாழ்ந்தார். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கத்தை உரித்தாக்குகிறோம்!
இவண்:
தொல்.திருமாவளவன்
நிறுவனர் – தலைவர்,
விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here