முனைவர் ஆனார் தொல்.திருமாவளவன்

0
460

கடந்த சில ஆண்டுகளாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் ‘Mass Religious Coversion at Meenakshipuram; A Victimological Analysis’ என்ற தலைப்பில் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் மேற்கொண்ட முனைவர் பட்ட (PhD) ஆய்வு அறிக்கையை (Thesis) பல்கலைகழகத்தில் சமர்பித்திருந்தார்.

நேற்று (24.8.2018) பல்கலைகழகத்தில் வாய்மொழித் தேர்வு நடைபெற்றது. அத்தேர்வில் பங்கேற்று தனது ஆய்வை விளக்கி உரையாற்றினார். டெல்லியில் இருந்து வந்திருந்த தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் குற்றவியல் துறையின் பேராசிரியரும், வாய்மொழித் தேர்வின் (Viva) கண்காணிப்பாளருமான திரு.பாஜ்பாய் அவர்களும், எழுச்சித்தமிழரின் ஆய்வு நெறியாளரும், பேராசிரியருமான Dr.திரு.சொக்கலிங்கம் அவர்களும், மற்றும் அங்கிருந்த பேராசிரியர்களும், மாணவர்களும் எழுப்பிய கேள்விகளுக்கு எழுச்சித்தமிழர் பதிலளித்தார்.
முனைவர் பட்ட ஆய்வில் (PhD) எழுச்சித்தமிழர் தேர்ச்சி பெற்றதாக தேர்வாளர்கள் அறிவித்தனர்.

பின்னர் பல்கலைகழக துணைவேந்தர் திரு.பாஸ்கர் அவர்களும் எழுச்சித்தமிழரின் ஆய்வு நெறியாளரும், எனது பேராசிரியருமான முன்னாள் துணைவேந்தர் Dr.சொக்கலிங்கம் அவர்களும் முனைவர் பட்ட (Ph.D – Provisional Certificate) சான்றிதழை வழங்கினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here