எங்களை கொள்வதை நிறுத்துங்கள்

0
195

வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற `எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்’ ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பெஸ்வாடா வில்சன், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி மற்றும் பல செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர். துப்புரவுத் தொழிலாளர்களின் வேலைகளைச் சீர்படுத்தி, துப்புரவுத் தொழிலை இயந்திரமயமாக்காத அரசையும், பொது மனசாட்சியையும் கேள்வி கேட்டு, #StopKillingUs பிரசாரம் நாடு முழுவதும் நடத்தப்பட்டுவருகிறது. `எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்’ என்ற வாசகம் தாங்கிய பதாகைக்குப் பின்னும் முன்னும் ஏராளமான துப்புரவுத் தொழிலாளர்கள், கொல்வதை நிறுத்தச்சொல்லி கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், “சஃபாய் கரம்சாரி அந்தோலன் அமைப்பு மிகப் பெரிய காரியத்தைச் செய்துகொண்டிருக்கிறது. பெஸ்வாடா வில்சன் பேசியதைப்போல, நாடாளுமன்றத்தில் துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் பேசிய குரல்களை, விரல்விட்டு எண்ணலாம்தான். அப்படிப் பேசிய குரல்கள்கூட கணக்கில் வராமலும், கண்டுகொள்ளப்படாமலும் போய்விட்டன. நாட்டை ஆளும் கட்சிக்கு, இப்போது சாதி, மத அரசியலைத் தவிர செய்வதற்கு வேறு எந்த வேலையும் இல்லை. மத்திய-மாநில அரசுகள், எல்லாவற்றையும்போல துப்புரவுத் தொழிலாளிகள் மீதும் காட்டும் போக்கு கடுமையான கண்டனத்திற்குரியது. அரசுகளோடு, பொதுச் சமூகமும் திரளாத வரை இதற்குத் தீர்வு காண முடியாது. காலையில் எழுந்து வேலையை முடித்து, ஃப்ளஷ் செய்துவிட்டு மறந்துவிடுவதா? கூட்டு மனசாட்சி, உங்களை எப்போது கேள்வி கேட்கும்?” என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here