6.5 லட்சம் மதிப்புள்ள சைக்கிள்களை  ஈழத்தில் பள்ளி பிள்ளைகளுக்கு  எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வழங்கினார்

0
240
தாய்மண் அறக்கட்டளையின் சார்பில்
6.5 லட்சம் மதிப்புள்ள சைக்கிள்களை 
ஈழத்தில் பள்ளி பிள்ளைகளுக்கு 
எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வழங்கினார்
ஈழத்தில் இயங்கி வரும் தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் அழைப்பை ஏற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் நான்கு நாள் பயணமாக ஈழம் சென்றுள்ளார்.
நேற்று (9.11.2018) 12 மணி விமானத்தில் சென்று கொழும்பு விமான நிலையத்தில் இறங்கிய அவரை தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் திரு.சந்துரு அவர்கள் சந்தன மாலை அணிவித்து வரவேற்றார்.
கொழும்பிலிருந்து சிலாபம், வவுனியா, கிளிநொச்சி வழியாக யாழ்பாணம் சென்றடைந்தார்.
இன்று 10.11.2018 யாழ்பாணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் எழுச்சித்தமிழர் பங்கேற்றார்.
காலை கனகரத்தினம் மையப் பள்ளியில் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அவர்களும் மரங்களை நட்டனர். பின்னர் திரு.விக்னேஸ்வரன் அவர்களின் வீட்டுக்கு சென்ற எழுச்சித்தமிழரை அவர் மாலை அணிவித்து வரவேற்றார். இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது
 மாலையில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற மரநடுகை மற்றும் மலர்கண்காட்சி திறப்புவிழாவை எழுச்சித்தமிழர் விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களும் பங்கேற்றார்.
பள்ளி பிள்ளைகளுக்கு தாய்மண் அறக்கட்டளையின் சார்பில் ரூபாய் ஆறரை லட்சம் மதிப்புள்ள சைக்கிள்களை தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் மூலம் வழங்கினார். அங்கே மக்களிடம் சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார்.
கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக அறிவித்து தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் மாதம் முழுவதும் ஈழத்தில் மரம் நடும் பணிகளை செய்யவுள்ளது. அதனையொட்டி தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை சிறப்பு விருந்தினராக பசுமை இயக்கம் அழைத்துள்ளது.
12.11.2018 வரையில் ஈழத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.  இந்நிகழ்வுகளை தமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் திரு.பொ.ஐங்கரதேசன் அவர்கள் ஒருங்கிணைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here