பாதிக்கப்பட்ட மக்களை சாதி அடிப்படையில் சிலர் அணுசரிக்கும் போக்கை சரி செய்க – திருமா வேண்டுகோள்

0
295
கஜா புயல் நிவாரணநிதியாக ரூபாய் பத்து லட்சம்
முதலமைச்சரிடம் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வழங்கினார் 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பதினோரு மாவட்டங்களைச் சார்ந்த மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும், சேதமடைந்த குடிசைகள், சாலைகள், மின்கம்பங்கள் போன்ற யாவற்றையும் சீரமைத்து மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக இன்று (23.11.2018) தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ரூபாய் பத்து லட்சத்துக்கான காசோலையை எழுச்சித்தமிழர் நிதியுதவியாக வழங்கினார். அவருடன் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் கலந்துகொண்டார்.

மாண்புமிகு முதல்வர் அவர்களிடத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கேட்டறிந்தார். புயலால் குடிசைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு அரசுத் தரப்பில் வீடுகள் கட்டித் தரவேண்டும் என்றும் தென்னை மரங்கள் உள்ளிட்ட பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடு தரவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதல்வரிடம் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.

பாதிக்கப்பட்ட மக்களை சாதி அடிப்படையில் சிலர் அணுகுவதாக வெளிவந்துள்ள தகவல்களை சுட்டிக்காட்டி அத்தகைய போக்குகளை சரிசெய்ய வேண்டும் என்றும் மாண்புமிகு முதல்வரிடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here