காவிரியில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துக

0
175
காவிரியில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துக
மத்திய மாநில அரசுகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை உடனடியாக மத்திய அரசுதடுத்து நிறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழக அரசு விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட
வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.

காவிரியின் குறுக்கே தடுப்பணை கூட புதிதாக கட்டக்கூடாது என
உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ள நிலையில் அதை மீறும் விதமாக கர்நாடக அரசு அணை ஒன்றையும், நீர்மின் உற்பத்தி நிலையம் ஒன்றையும் கட்டுவதற்கு முடிவெடுத்துள்ளது. இதற்கு மத்திய நீர் ஆணையம் ஒப்புதல் வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி மேலாண்மை
ஆணையத்தின் ஒப்புதலின்றி காவிரி தொடர்பான எந்தவொரு நடவடிக்கைக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க முடியாது என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கர்நாடக அரசும் மத்திய பாஜக அரசும் தமிழகத்தை வஞ்சிக்கும் விதமாக நடந்துகொள்வது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.

கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியைத் தமிழக அரசு தடுத்து நிறுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். இது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்.

நிறுவனர் – தலைவர்
விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here