நீ
கிடைத்திரா விட்டால்
ஆண்டைகளின் முன்
ஆடுகளாய்த்தான்
கிடந்திருப்போம்!
தலைமுறைகளின்
கண்ணீரை
திராவகமாக்கினாய்
சேரியின்
குமுறல்களை
எரிமலையாக்கினாய்
சிதறுண்ட
சனங்களை
சமுத்திரமாக்கினாய்
செந்தமிழ் மொழியினை
அரியணை
ஏற்றினாய்
உனது
வார்த்தைக் கிடங்குகளில்
புதிய
வரலாறு எழுந்தது
உனது
வாழ்க்கைச் சூத்திரத்தில்
விடுதலையின்
வெளிச்சம் தெரிந்தது
ஏமாற்றப்பட்டோரின்
ஒற்றை நம்பிக்கையாய்
நிமிர்கிறாய்
அம்பேத்கராய்
பெரியாராய்
மார்க்ஸாய்
சுரண்டப்பட்டோரின்
துயர் நீக்கு
உமக்கு
பிறந்தநாள் எடுப்பது
எங்களை நாங்களே
கூர்தீட்டிக்கொள்வது
வாழ்த்துக்கள்.
– அரசமுருகபாண்டியன்
Leave a comment
Leave a comment