`இனி `இந்தியா’ கூட்டணி தொடருமா? டு விஜய் அரசியல் வருகை வரை..!’ – திருமாவளவன் சொல்வதென்ன?!

Sridhar Kannan
Sridhar Kannan 2 Min Read

2024 நாடாளுமன்ற தேர்தலின் மூலம், மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி! இந்த நிலையில், வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனை நேரில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்.

“இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆட்சிப் பொறுப்பை வழங்காததை நீங்கள் எப்படி புரிந்துகொள்கிறீர்கள்?”

“மேற்கு வங்கம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் `இந்தியா’ கூட்டணிக்குள்ளயே போட்டிகளும் நிலவின. இந்தியா கூட்டணியில் 28 கட்சிகள் ஒன்றாக நின்றதே தவிர, முழுமையாக ஒருங்கிணையவில்லை. சில கருத்து முரண்பாடுகளும் இருந்தன. எனவே பிரதமர் வேட்பாளர்களை முன்னிறுத்தும் பங்குவமும் உருவாகவில்லை. ‘இந்தியா கூட்டணி ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இயங்க வேண்டிய காலம் இன்னும் கனியவில்லை’ என மக்கள் கருதியதால் இத்தீர்ப்பை வழங்கியிருப்பதாக பார்க்கிறேன்.”
இந்தியா கூட்டணி

இந்தியா கூட்டணி

`வெற்றிக் கூட்டணி தொடரும்… தோல்வி கூட்டணி உடையும்’ என்பதுதான் தேர்தல் வரலாறுகள் சொல்லும் செய்தி.. தோல்வியடைந்திருக்கும் இந்தியா கூட்டணி தொடருமா?”

“பா.ஜ.க தரப்பு பதவியேற்கும் முன்பே எதிர்க்கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.`இந்தியா’ கூட்டணியிலிருந்து சிலரை அங்கே இழுக்கப் போகிறார்கள் போன்ற வதந்திகள் பரவின. ஆனால், `நாம் எதிர்க்கட்சியாக இருந்து ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என டெல்லி, மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஒருமித்த கருத்துடன் அனைவரும் இருந்தனர்” எனவே அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரை ஒன்றிணைந்து நிற்போம் என நான் உறுதியாக நம்புகிறேன்”

முதல்வர் ஸ்டாலின் - விசிக தலைவர் திருமாவளவன்

முதல்வர் ஸ்டாலின் – விசிக தலைவர் திருமாவளவன்

“நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்பு குறித்து…”

“சாதியவாதிகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை சிதம்பரம் மற்றும் தர்மபுரி தொகுதியும், மதவாதிகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை கோவை தொகுதியும் உணர்த்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க-வால் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை. அ.தி.மு.க-வுக்கு அவர்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்றாலும், பா.ஜ.க-வை கூட்டணியிலிருந்து வெளியேற்றியது பாஸிட்டிவ் சைன்தான். முற்றிலுமாக தி.மு.க-வுக்கு செல்லும் சிறுபான்மையினரின் வாக்குகள் இம்முறை அ.தி.மு.க-வுக்கு வந்துள்ளது. கடந்தமுறை 19% வாக்குகளை பெற்ற அ.தி.மு.க 20% அதிகரித்திருக்கிறது”

`இனி `இந்தியா’ கூட்டணி தொடருமா? டு விஜய் அரசியல் வருகை வரை..!’ - திருமாவளவன் சொல்வதென்ன?!

“தி.மு.க, பா.ஜ.க-வுக்கு வாழ்த்துதெரிவிக்காத விஜய் விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியை மட்டும் வாழ்த்தியிருக்கிறார்… அவரின் அரசியல் வருகை குறித்து உங்கள் பார்வை என்ன?:”

“வி.சி.க இப்போதுதான் மாநில கட்சி அங்கீகாரம் பெற்றிருக்கிறது. ஆனால், தி.மு.க எப்போதோ அந்த இலக்கை அடைந்து ஆட்சி பொறுப்பிலும் இருக்கிறார்கள். எனவே வளர்ந்து வருகிற இயக்கம் என்கிற முறையில் வி.சி.க-வை மட்டும் விஜய் வாழ்த்தியிருக்கலாம். ஆரம்பத்தில் தனித்து போட்டியிட்ட பல கட்சிகள் காலப்போக்கில் தி.மு.க, அ.தி.மு.க-வுடனேயே கைகோர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. தன் பலத்தை அறிந்துகொள்ள தனித்து கூட விஜய் போட்டியிடலாம்.. அல்லது கூட்டணி அமைத்தும் போட்டியிடலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்”

லெ.ராம்சங்கர்

நன்றி : விகடன்

Share This Article
Leave a comment