மதுவிலக்கை அமல்படுத்து- டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடு! சென்னையில் திருமாவளவன் இன்று போராட்டம்!

Sridhar Kannan

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; டாஸ்மாக் மதுபான கடைகளை இழுத்து மூட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று மாலை 4 மணிக்கு திருமாவளவன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் இதுவரை 57 உயிர்களைக் குடித்துள்ளது. தொடர்ந்தும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயத்தை மட்டுமல்ல தமிழ்நாட்டில் மதுவிற்பனையையே முழுமையாக தடை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வலியுறுத்தியும் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை இழுத்து மூடக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று போராட்டம் சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் இந்த போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தலைவரின் உரை:

Share This Article
Leave a comment