மேலவளவு நினைவேந்தல்: விசிக தலைவர் திருமாவளவன் உரை

Sridhar Kannan
Sridhar Kannan 1 Min Read

1997 சூன் 30 அன்று சாதிவெறியர்களால் கொடூரமானமுறையில் படுகொலை செய்யப்பட்ட “அரசியல் உரிமைப் போராளிகள்” வணக்கத்திற்குரிய தோழர்கள் மாவீரன் முருகேசன் உள்ளிட்ட எழுவருக்கும்; அப்பகுதியில் சாதிவெறியா்களால் படுகொலையான தோழர்கள் சென்னகரம்பட்டி அம்மாசி, வேலு, உலகுபிச்சன்பட்டி சந்திரன், கத்தப்பட்டி மலைச்சாமி, வஞ்சிநகரம் கந்தன் மற்றும் மதுரை-முடக்காத்தான் பாண்டியன் ஆகிய யாவருக்கும் மதுரை மாவட்டம் மேலவளவில் நாம் கட்டியெழுப்பியுள்ள “விடுதலைக் களம்” என்னும் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினேன்.

அதன் பின்னர் மேலவளவு போராளிகளின் வீரவணக்கப் பொதுக்கூட்டம் மேலவளவில் நடைபெற்றது. சாதி வெறியர்களால் படுகொலையான தோழர்களின் குடும்பத்தினருக்கு உதவிகளை வழங்கினோம். பல்லாயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் இன்று மேலூரில் திரண்டு வீரவணக்கம் செலுத்தி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
Share This Article
Leave a comment