மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதற்கு கண்டனத்திற்குரியது. இந்த விவகாரத்தில் சிங்கள கடற்படையினரை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “வங்கதேசத்தில் நடக்கும் பதட்டமான சூழல் இந்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை. அமெரிக்க ஏகாப்பத்தியதிற்கு எதிரான அரசுகள் எங்கு இருந்தாலும் தூக்கி ஏறிய கூடிய வகையில் உளவு அமைப்புகள் செயல்பட்டு வருவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். இதை புறம் தள்ள முடியாது.
சமூக வலைதளங்களை பயன்படுத்தியே ஆட்சியை கவிழ்க்க முடியும், ஆட்சியாளர்களை விரட்ட முடியும் என்று அன்மைகாலமாக நிகழ்ந்து வரும் ஒன்றாகும்.வங்க தேசத்தில் நடந்து உள்ளதை இந்திய ஆட்சியாளர்கள் ஒரு படிப்பினையாக கொண்டு இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதற்கு கண்டனத்தை பதிவு செய்து வருகிறோம். இந்த விவகாரத்தில் இந்திய ஆட்சியாளர்கள் மெத்தனமாக இருந்து விடுகின்றனர். சிங்கள கடற்படையினரை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும். ஈழ தமிழர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு தமிழர்களும் சிங்கள ஆட்சியாளர்களால் பாதிக்கும் நிலை நீடிக்கிறது. தமிழ்நாடு மீனவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் எல்லா ஆட்சிக்காலத்தில் நடந்து வருவது தான். அதிமுக ஆட்சி காலத்திலும் நடந்து இருந்ததை மறந்து விட முடியாது. தமிழ்நாட்டில் நடந்து வரும் சமூக விரோதி செயல்களை, அரசு தீவிரமாக கண்காணித்து முற்றாக அழித்து ஒழிக்க் வேண்டும். கூலிப்படை கலாச்சாரத்தை தடுத்தாக வேண்டும். சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் வன்கொடுமைகளை தடுக்கவும் முன் கூட்டியே கண்டறிய தனி உளவு பிரிவு தேவை என்பதை தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.
விஜய் கட்சி மாநாடு நடத்த இடம் வழங்க கூடாது என அழுத்தம் தரப்பட்டு இருந்தால் தவறு. நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலேயே ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது. ரூ. 5 கோடி மேம்பாட்டு நிதியில் கிட்டத்தட்ட ரூ.90 லட்சம் ஜி.எஸ்.டிக்கு ஒதுக்கப்படுகிறது. அத்திவாசிய பொருட்கள், மருத்துவ துறையில் ஜி.எஸ்.டி விதிப்பது ஏற்புடையது அல்ல. இது தொடர்பான விவாதம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். மாநில அரசுகளின் உணர்வுகளை கோரிக்கைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வக்பு வாரிய திருத்தம் அறிமுகப்படுத்தகூடிய நிலையில் எதிர்க்கப்படும். ஆம்ஸ்டராங் குடும்பத்திற்கு நிலையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும். கொலை மிரட்டல் வருவது அதிர்ச்சி அளிக்கிறது. வளர்ந்து வரக்கூடிய தலைவர் சீமான் அரசியல் நாகரீகத்தை மீறவது ஏற்புடைதல்ல. கொள்கையை பேச வேண்டும். வன்மத்தை வெளிப்படுத்துவது அவருக்கே நல்லதல்ல” இவ்வாறு அவர் கூறினார்.