விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை நிலை அமைப்பான ‘விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின்’ மாநிலத் துணைச் செயலாளர் களப்போராளி தம்பி உசிலை இராமர் என்கிற #தென்னரசு அவர்கள் புற்றுநோயின் தாக்குதலால் உடல் நலிவுற்ற நிலையில், 08-08-2024 அன்று இரவு 09.00 மணி அளவில் காலமானார். அவருக்கு எனது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
அவரது மறைவு பெரும் துயரமளிக்கிறது. தொடக்க காலத்தில் மதுரைப் பகுதிகளில் இயக்கத்திற்கு எதிராக எழுந்த கடுமையான சாதிய நெருக்கடிகளைத் துணிச்சலாக எதிர்கொண்டவர்களுள் இவரும் ஒருவர். சிறுத்தைகள் இயக்கத்தை அப்பகுதியில் வேர்பிடிக்கச் செய்தவர். அவரது மறைவு சிறுத்தைகளுக்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனைவியைத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். அவரது திருவுடலுக்கு விசிக சார்பில் முன்னணி பொறுப்பாளர்கள் ஏராளமானோர் மாலையிட்டு வீரவணக்கம் செலுத்தினர்.