விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்களின் பிறந்த நாளான இன்று அவரை நேரில் வாழ்த்தி மகிழ்ந்தோம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ‘மேஜர் ஜெனரல்’ எனப் பாராட்டப்பட்டவர். கழகத் தலைவர்
@mkstalin அவர்களின் அன்புக்குரிய உடன்பிறப்பு. சமத்துவம் – சமூகநீதி கோட்பாட்டின் அடிப்படையில் நம்மோடு கரம் கோர்த்து நிற்கும் அன்பு அண்ணன். பாசிஸ்ட்டுகளின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இடந்தராமல், எல்லாத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய மானுட விடுதலைக்காக கொள்கை உரத்தோடுக் களமாடும் அண்ணனின் பயணத்தில் எப்போதும் உடன் நிற்போம். அவரின் பணிகள் சிறக்கட்டும்.