விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் பிறந்த நாளான இன்று (17.8.2024) அவர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார். எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து இயக்கப் புத்தகங்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் பாபு, ஆளூர் ஷாநவாஸ் மற்றும் வி.சி.க. பொறுப்பாளர்கள் உள்ளனர்.
Leave a comment
Leave a comment