“சமூக அநீதிகளுக்கு எதிராக தீரத்துடன் போராடுகிற புரட்சியாளர்” – கமல்ஹாசன்

Sridhar Kannan

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,

“இன்று பிறந்த நாள் காணும் என் அன்புத் தம்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் திருமாவளவன். ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்மயப்படுத்திய ஜனநாயகவாதி. சமூக அநீதிகளுக்கு எதிராக தீரத்துடன் போராடுகிற புரட்சியாளர். சமூகநீதிக் கோட்பாட்டை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ளும்படி விளக்கும் ஆற்றல் மிக்க பேச்சாளர். இந்த இனிய நாளில், தம்பி திருமாவளவன் கையில் எடுத்திருக்கும் பெரும்பணிகள் வெல்க என வாழ்த்தி மகிழ்கிறேன். ஜெய் பீம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Share This Article
Leave a comment