62வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் நேரில் வாழ்த்து

Sridhar Kannan

சென்னை: திருமாவளவன் தனது 62வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்பியுமான திருமாவளவனுக்கு நேற்று 62வது பிறந்த நாள். இதையொட்டி சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் பிறந்தநாள் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், கவியரங்கம், பட்டிமன்றம், வாழ்த்தரங்கம் இடம்பெற்றது.

விழாவில் கி.வீரமணி, கவிஞர்கள் அப்துல்காதர், தனிக்கொடி, சினேகா, அருண்பாரதி, தஞ்சை இனியன், நடிகர் ராஜ்கிரண், இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, லட்சுமி ராமகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் சிந்தனை செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, முகமது ஷாநவாஸ், பனையூர் பாபு, துணை பொதுச்செயலாளர்கள் ஆதவ் அர்ஜுனா, தயாளன், வன்னி அரசு, தலைமை கழக நிர்வாகிகள் பாவரசு, பாலசிங்கம், தகடூர் தமிழ்செல்வன், திருமாவளவனின் தனி செயலாளர் மு.தயாளன், மாவட்ட செயலாளர்கள் கரிகால்வளவன், தளபதி குமரப்பா, ராமராஜன், வேலாயுதம், சிறுத்தை கிட்டு, முருகையன், ஷீலா தேவிசேரன், தென்னவன், வளர்மதி, லயன் ஆர்.பன்னீர்தாஸ், ஆமோஸ், தொழில்நுட்ப கல்வி துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்சி,எஸ்டி பணியாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் டி.மகிமைதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தனது பிறந்தநாளையொட்டி திருமாவளவன் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், எம்பி தயாநிதி மாறன், முரசொலி செல்வம் ஆகியோர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Share This Article
Leave a comment