யாருக்கு அக்கறை!

Sridhar Kannan

எண்ணற்ற கட்சிகளோ நாட்டினிலே உண்டு! – அவை
ஏதேதோ கொள்கையுந்தான் பேசிடுதல் உண்டு!
ஏழைக்காக உழைப்பவர் நாங்களே என்று – தலைவர்கள்
எல்லோரும் வாழ்கிழிய பேசுவதோ நன்று!
என்னதான் நடக்கிறது நாட்டினிலே இன்று – தம்பி
ஏழைக்கு இவர்களாலே என்ன பயனுண்டு?

Share This Article
Leave a comment