சனவரி 26- அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்- குடியரசு நாள்!

Sridhar Kannan

சனவரி 26- அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்- குடியரசு நாள்!
———————-
அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு உறுதிமொழி!
———————-
இந்தியா 76ஆவது குடியரசு நாளைக் கொண்டாடும் இன்றைய நாளில் இந்தக் குடியரசின் அடிப்படையாக இருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரால் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட இந்நாளில் பின்வரும் உறுதிமொழியை ஏற்கிறோம்.

உறுதிமொழி!
——————–

புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரால்….

எமது கருத்துகளை அச்சமின்றி வெளிப்படுத்தும் சுதந்திரத்தையும் அதை உறுதிசெய்துள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் குறித்த பிரிவுகளையும் பாதுகாப்போம் என உறுதி ஏற்கிறோம்!

புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரால்…

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமநீதியை, சமூகநீதியை உறுதியளிக்கும் நீதித்துறையையும் அதன் சுதந்திரத்தையும் பாதுகாக்க உறுதி ஏற்கிறோம்!

புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரால்…

’ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு; ஒவ்வொரு வாக்குக்கும் ஒரே மதிப்பு’ என்ற அரசியல் சமத்துவத்தைப் பதுகாப்பதோடு அதை சமூக, பொருளாதாரத் தளங்களுக்கும் விரிவுபடுத்த பாடாற்றுவோம் என உறுதி ஏற்கிறோம்!

புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரால்…

இனங்களாக, மதங்களாக, சாதிகளாக, பாலினங்களாகப் பிரிந்து கிடக்கும் இந்திய குடிமக்களிடையே சமத்துவத்தையும் சகோதரத்தவத்தையும், சுதந்திர உணர்வையும் வளர்த்தெடுக்க உறுதி ஏற்கிறோம்!

புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரால்…

காந்தியடிகள் உள்ளிட்ட எண்ணற்றோர் தமது இன்னுயிரை ஈந்து பாதுகாத்த மதச்சார்பின்மை என்னும் கொள்கைக்கு ஊறு நேராமல் காத்து நிற்போம் என உறுதி ஏற்கிறோம்!

இவண்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Share This Article
Leave a comment