Home செய்திகள் ராமதாஸும், நானும் பிரிய நேர்ந்தபோது.. யார் எனக்கு துணை நின்றார்கள்? – திருமாவளவன் வேதனை

ராமதாஸும், நானும் பிரிய நேர்ந்தபோது.. யார் எனக்கு துணை நின்றார்கள்? – திருமாவளவன் வேதனை

14
2

மருத்துவர் ராமதாஸும், நானும் பிரிய நேர்ந்தபோது… யாராவது எனக்கு துணை நின்றிருப்பார்களா? முட்டிமோதி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என திருமாவளவன் பேசியுள்ளார்.

026 சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்பான சூழலில், ராமதாஸ் தரப்பு பாமக திமுகவில் இணைய விருப்பம் காட்டுவதாக சொல்லப்படும் நிலையில், திருமாவளவனின் விசிக அதற்கு எதிராக நிற்கிறது. தமிழ் உணர்வாளர்கள் ராமதாஸ் பின்னால் சென்றதை நினைவுபடுத்தி, தனது தலைமையை ஏற்றுக்கொள்ளாத சமூகம் குறித்து திருமாவளவன் வேதனை தெரிவித்தார்.

ராமதாஸும், நானும் பிரிந்தபோது என்ன நடந்தது..?

திமுகவில் பாமக இணைவதை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு முன்பு பதிலளித்திருந்த திருமாவளவன், ”பாஜக, பாமக அங்கம் வைக்கும் கூட்டணியில் விசிக இடம்பெறாது. பாமக குறித்து 14 ஆண்டுகளுக்கு முன்பே விசிக முடிவு எடுத்து விட்டது. அதில் எந்தமாற்றமும் இல்லை” என தெரிவித்தார்.

மருத்துவர் ராமதாஸும், நானும் சேர்ந்து தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை நடத்தினோம். தேர்தல் காரணத்திற்காக நானும் அவரும் பிரியநேர்ந்தபோது, தமிழ் உணர்வாளர்கள் யார் பின்னால் போனார்கள்?

எல்லோரும் வலுத்தவர் ராமதாஸ் பின்னால் சென்றுவிட்டார்கள். ஏன் திருமாவளவன் பின்னால் அவர்களால் வர முடியவில்லை. எது தடுத்தது?

அவரை தமிழினக் காவலர் எனக் தூக்கிக் கொண்டாடிய ஒரு நபர் கூட திருமாவளவனுன்கு ஆறுதலாக நிற்கவில்லை. முட்டி மோதி, கரணம்போட்டுதான் திருமாளவன் இன்று நிற்கிறார். என்னை அவ்வளவு எளிதாக இந்த தமிழ்ச் சமூகம் ஏற்கவில்லை. என் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை” என்று பேசியுள்ளார்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here