ஏப்ரல்14- ஆர்டிகிள்14
~~~~~~~~~~
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள்- அனைத்துலக சமத்துவ நாள் !
~~~~~~~~~~
உறுதிமொழி
~~~~~~~~~~
மாமனிதர் பேராசான் கௌதமபுத்தரின் கோட்பாட்டுவழியில், அவரது கொள்கை வாரிசாக இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், இம்மண்ணில் சமத்துவத்தை வென்றெடுப்பதற்காக தன் வாழ்நாளை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டார்.
அவர் தனது பேரறிவு பேராற்றலின் மூலம் நமக்கு வழங்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்வழி அதனை நிலைநாட்டுவதற்கு உரிய அடித்தளத்தை அமைத்தார். அதுவே, அரசியலமைப்புச்சட்டத்தின் பதினான்காவது உறுப்பாகும்.
” இந்திய அரசானது தனது ஆட்சிப் பரப்புக்குள் சட்டத்தின் முன்னால் சமத்துவத்தையும், சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பில் சமத்துவத்தையும் எவர் ஒருவருக்கும் மறுத்தல் ஆகாது. ”
இதுதான் அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் அளிக்கும் சமத்துவ உரிமையாகும்.
இந்தியாவில் வசிக்கும் யாவரும் சட்டத்தின் முன்னால் சமம்; அச்சட்டத்தின்மூலம் அளிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்யாவும் அனைவருக்கும் சமத்துவமான முறையில் அமையவேண்டும்; எந்த அடிப்படையிலும் யார்ஒருவருக்கும் சமத்துவம் மறுக்கப்படக்கூடாது என்பதே அரசியலமைப்புச் சட்டத்தின் பதினான்காவது உறுப்பு உறுதிப்படுத்துவதாகும்.
எனவே, அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள சமத்துவ உரிமையைப் பாதுகாத்திடவும்; அதன்மூலம் சமூகம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் அனைவருக்குமான சமத்துவத்தை வென்றெடுக்கவும், ஏப்ரல்14 இன்று, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளான – அனைத்துலக சமத்துவ நாளில் உறுதியேற்கிறோம்!
சாதியத்தை வேரறுப்போம்! – மானுட
சமத்துவத்தை வென்றெடுப்போம்!
இவண்
தொல்.திருமாவளவன்,
நிறுவனர் – தலைவர்,
விசிக.









