விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மையங்கள் & துணைநிலை அமைப்புகள்
கருத்தியல் தத்துவ வழிகாட்டல், ஆவணப் பாதுகாப்பு, மக்கள் ஊடகத் தொடர்பு மற்றும் வர்க்க, சமூக விடுதலைக்கான துணைநிலை அமைப்புகளின் அதிகாரப்பூர்வ விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்.
இயக்கத்தின் மையங்கள் (Core Centers)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை, தத்துவம், ஆவணம், வெளியீடு மற்றும் மக்கள் தொடர்பு பணிகளைத் திறம்பட முன்னெடுக்க தலைமை அமைப்பால் 4 முதன்மை மையங்கள் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இவை இயக்கத்தின் அடிப்படைத் தூண்களாகத் திகழ்கின்றன.
தத்துவ மையம் (Philosophy Center)
கருத்தியல் தலைமை & பகுப்பாய்வு பிரிவுஇயல்நிலை உண்மைகளை நோக்கியக் கருத்தியல்கள் என்னும் தத்துவங்கள், காலச் சூழல்களுக்கேற்ப மானுட வாழ்வியலில் நிலவும் பல்வேறு முரண்பாடுகளின் அடிப்படையில் அவ்வப்போது பரிணமிக்கின்றன. மதம், அரசியல், பொருளியல் போன்றத் தளங்களிலிருந்து உருவாகும் தத்துவங்கள் தனிமனிதனை அல்லது சமூகத்தை வழிநடத்திச் செல்வதில் ஆளுமைச் செலுத்துகின்றன.
அத்தகையத் தத்துவங்களின் அடிப்படைகளையும், பின்னணிகளையும், அவற்றின் விளைவுகளையும் தொலைநோக்குப் பார்வையில் ஆராயவும், ஆதிக்கம், ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் போன்றவற்றிலிருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கேற்ற அம்பேத்கரியம் முதலான தத்துவங்களை அமைப்பு வழியில் முன்னெடுத்து, தத்துவத் தலைமையை நிலைநாட்டவும் இயக்கத்திற்கு உறுதுணையான வகையில் செயலாற்றுவதே தத்துவ மையத்தின் நோக்கமாகும்.
ஆவண மையம் (Documentation & Archives Center)
வரலாறு, தேர்தல் ஆவணங்கள் & கள ஆய்வகம்ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் விடுதலைக்கானப் பணிகளுக்கு உறுதுணையாக அமையும் வகையிலும், ஆய்வுகளுக்குப் பயன்படும் வகையிலும், சமூகம், அரசியல், பொருளியல், வரலாறு, மதம், தத்துவம் போன்றவை தொடர்பான நூல்கள், ஏடுகள், கல்வெட்டுப் பதிவுகள், ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் இயக்கத்தின் செயல்பாடுகள் தொடர்பான ஆவணங்கள், ஒலி-ஒளி நாடாக்கள், குறுந்தகடுகள், புகைப்படங்கள், தேர்தல் ஆவணங்கள் முதலியவற்றின் கடந்தகால, நிகழ்காலப் பதிவுகளைத் தொகுப்பதும், பாதுகாப்பதும் ஆவண மையத்தின் நோக்கமாகும்.
வெளியீட்டு மையம் (Publication Center)
பதிப்பகம், கொள்கை நூல்கள், இதழ்கள் & விற்பனையகம்இயக்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளைப் பரப்பும் வகையிலும், இயக்கச் செயல்பாடுகளை ஆவணங்களாகப் பதிவு செய்யும் வகையிலும், நூல்கள், நாளேடுகள், பருவகால இதழ்கள், குறுந்தகடுகள், இணையத்தளங்கள் போன்றவற்றை வெளியிடுவதும், அவற்றுக்கான பதிப்பகம், வெளியீட்டகம், விற்பனையகம் முதலியவற்றைக் கட்டமைப்பதும் வெளியீட்டு மையத்தின் நோக்கமாகும்.
செய்தித் தொடர்பு மையம் (Media & Communications Center)
இதழியல், செய்தி ஊடக ஒருங்கிணைப்பு & பிரஸ் தொடர்புஇயக்கத் தீர்மானங்கள் மற்றும் நிலைப்பாடுகள், அவ்வப்போது வெளியிடப்படும் பொதுச் செயலாளரின் அறிக்கைகள் மற்றும் முடிவுகள் போன்றவற்றைச் செய்தி ஊடகங்களின் வழியாக வெகுமக்களைச் சென்றடையச் செய்வது செய்தித் தொடர்பு மையத்தின் நோக்கமாகும்.
விரைவு வழிகாட்டி
கட்சி விதிகளின்படி துணைநிலை அமைப்புகளின் மாநில, மாவட்ட, வட்டாரப் பிரதிநிதிகள் மையப்பேரவையின் முன்னிலையிலேயே தேர்ந்தெடுக்கப்படுவர்.
துணை அமைப்பில் இணையுங்கள்!
உங்கள் துறை, பகுதி சார்ந்த துணை அமைப்பில் உறுப்பினராக பதிவுசெய்து சமூக மாற்றப்பணியில் பங்கெடுங்கள்.
“மையங்கள் என்பவை கொள்கையின் மூளை; துணைநிலை அமைப்புகள் என்பவை சமூக விடுதலைக்கான ஆற்றல் மிக்க கரங்கள்!”
— எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் எம்.பிதுணைநிலை அமைப்புகள் (Autonomous Mass Fronts)
வரையறை & நோக்கம்: இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களின் அடிப்படையில், தாழ்த்தப்பட்டோருடன் பிற சமூகங்களைச் சார்ந்த உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைத்து அரசியல்படுத்தவும், அவர்களை அமைப்பாக்கவும், மகளிர், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் போன்ற பல்வேறு தளங்களில் கட்டமைக்கப்படும் தன்னதிகாரம் பெற்ற அமைப்புகளே துணைநிலை அமைப்புகளாகும்.
தேவையினடிப்படையில், இவ்வமைப்புகளுக்கான கொடி, சின்னம், கட்டமைப்பு, நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் மையப்பேரவையின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வரையறுக்கப்படும். இவர்களில் கணிசமான அளவில் மகளிர் இடம்பெற வேண்டும்.
1 மகளிர் விடுதலை இயக்கம்
Women's Liberation Movementசாதி, மதம், நிலவுடைமை, முதலாளித்துவம் மற்றும் வல்லரசியம் ஆகியவற்றின் அடிப்படையில் மகளிருக்கெதிராகத் திணிக்கப்படும் ஆணாதிக்க ஒடுக்குமுறைகள், இழிவுகள், வன்கொடுமைகள் மற்றும் சுரண்டல்களை ஒழிக்கவும்; கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீடு உரிமை, நிலம் மற்றும் குடும்பச் சொத்துக்களில் சம உரிமை, மறுமண உரிமை போன்ற உரிமைகளை வென்றெடுக்கவும்; சமூகம், பொருளாதாரம், பண்பாடு மற்றும் அரசியல் முதலிய அனைத்துத் தளங்களிலும் பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டவும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற சமூகங்களைச் சார்ந்த மகளிரை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே இதன் நோக்கமாகும்.
2 தமிழக உழவர் இயக்கம் / விவசாய உழைப்பாளர் சங்கம்
Farmers & Agricultural Laborersசாதிய நிலவுடைமை, முதலாளித்துவம் மற்றும் வர்க்க ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் ஆகியவற்றை ஒழிக்கவும்; உழைப்புக்கேற்ற மற்றும் பாலினப் பாகுபாடற்ற ஊதியம், நிலம், நீர் மற்றும் இயற்கை வளங்கள் மீதான உரிமைகள், பஞ்சமி மற்றும் தரிசு நிலங்களை மீட்டெடுக்கவும், சிறு, குறு மற்றும் குத்தகை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் விவசாய உழைப்பாளர்களை அமைப்பாக்குவதே இதன் நோக்கமாகும்.
3 தொழிலாளர் விடுதலை முன்னணி
Workers Liberation Frontசாதியம், முதலாளித்துவம் மற்றும் வர்க்க சுரண்டல்களை முறியடிக்கவும், தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பு, பதவி உயர்வு, தொழிற்சங்கம் அமைத்தல் மற்றும் போராடுதல் உரிமைகளை நிலைநாட்டவும்; பணி, பொதுத்துறை மற்றும் தனியார் துறையில் சமூக நீதியை உறுதிசெய்து அமைப்புசார் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களை ஒருங்கிணைப்பது தொழிலாளர் விடுதலை முன்னணியின் நோக்கமாகும்.
4 மீனவர் மேம்பாட்டுப் பேராயம்
Fishermen Welfare Assemblyகடல் எல்லைகள் தொடர்பான அரச வன்கொடுமைகளை முறியடிக்கவும்; புயல், ஆழிப்பேரலை போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கவும்; மானியம், கடன் உதவி, வாழ்வூதியம், காப்பீடு, பாதுகாப்பான குடியிருப்புகள் போன்ற நலன்களைப் பாதுகாக்கவும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களை ஒருங்கிணைப்பது இதன் நோக்கமாகும்.
5 முற்போக்கு மாணவர் கழகம்
Progressive Students Leagueமாணவர்களிடையே நிலவும் சாதி, மத, வர்க்கப் பாகுபாடுகளை அகற்றவும்; கல்வி வணிகமயமாதலைத் தடுக்கவும்; பாலினச் சுரண்டல்களை ஒழிக்கவும்; அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை அடிப்படை உரிமைகளாக்கவும்; தாய்மொழி மற்றும் தேசிய இன உணர்வை ஊட்டவும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களை ஒருங்கிணைப்பது இதன் நோக்கமாகும்.
6 விடுதலை கலை இலக்கியப் பேரவை
Art & Cultural Liberation Wingஉழைக்கும் மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ள அடிமைத்தனமான மரபுகளை ஒழித்து சமத்துவம், சனநாயகம் நிறைந்த பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கவும்; கலை இலக்கியக் கருவிகள் வழியாகப் பண்பாட்டு விடுதலையை வென்றெடுக்க உழைக்கும் மக்களை அமைப்பாக்குவது இதன் நோக்கமாகும்.
7 அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை
Govt Employees Federationநீதி, நிர்வாகம், மருத்துவம், கல்வி போன்ற அனைத்து அரசுத்துறைகளிலும் சமூக நீதியை நிலைநாட்டவும், தாராளமயமாதல் மற்றும் தனியார்மயமாதலை முறியடிக்கவும் ஊழியர்களின் பணிப்பாதுகாப்பை உறுதிசெய்யவும் அரசு ஊழியர்களை ஒருங்கிணைப்பது இதன் நோக்கமாகும்.
8 சிறுபான்மையோர் கூட்டமைப்பு & சிறுவர் எழுச்சி மன்றம்
Minorities & Youth Wingசிறுபான்மையோர் கூட்டமைப்பு: இனம், மொழி, மதம் மற்றும் பாலின அடிப்படையில் சிறுபான்மை மக்களின் மனித உரிமைகள், கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உரிமைகளைப் பாதுகாப்பதுடன் இசுலாமியர், கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை ஒருங்கிணைப்பது இதன் நோக்கமாகும்.
சிறுவர் எழுச்சி மன்றம்: சிறுவர்களுக்குக் கற்கும் ஆற்றலை ஊக்குவிக்கவும், தற்காப்புப் பயிற்சிகள், சமூகத் தலைவர்களின் வரலாறுகளை அறியச் செய்யவும், குழந்தை உரிமை விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளது.