வரலாற்று ஆவணம் அடங்க மறு! அத்துமீறு! திமிறி எழு! திருப்பி அடி! — எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் எம்.பி
← முகப்புக்குத் திரும்புக 📘 Facebook
thiruma.in
முகப்பு / கட்சி / கட்சி வரலாறு & கொள்கைகள்
கட்சி வரலாறு & அதிகாரப்பூர்வ ஆவணம் 🕒 10 நிமிட வாசிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரலாறு & கொள்கைப் பிரகடனம்

தலித் பாந்தர்ஸ் இயக்க முதல் மக்கள் பேரியக்கமான வரையிலான தியாகமும் எழுச்சியும் செறிந்த வரலாறு.

🏛️
தலைமையகம் — அம்பேத்கர் திடல் சென்னை • ஆவணக் காப்பகம் • 2026-10-04
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எழுச்சிப் பேரணி
🚩 விடுதலைச் சிறுத்தைகள் — எழுச்சிப் பேரணி ஆவணப் பதிவு
🛡️ கட்சியின் புனித உறுதிமொழி

“இந்திய அரசியமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள சமத்துவம், சனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றிற்கு உண்மையாகவும், நம்பிக்கையாகவும், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதியாகக் கடைப்பிடிப்போமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதி அளிக்கிறது.”

இயக்க விவரம், சின்னம் & கொடி

இயக்கத்தின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றைப் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள்.

🏛️

இயக்கத்தின் பெயர்

இயக்கத்தின் பெயர் ‘விடுதலைச் சிறுத்தைகள்’ என்பதாகும். இயக்கம் என்பது ‘கட்சி’ என்றும் பொருள்படும். விளிம்புநிலை மக்களின் அரசியல் அதிகார உரிமைக்கு குரல் கொடுக்கும் பேரியக்கம்.

Viduthalai Chiruthaigal Katchi
VCK Emblem

கட்சியின் சின்னம்

சீறும் சிறுத்தையை மையமாகக்கொண்டு, அதைச் சுற்றிலும் மேல்பாகத்தில் “சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை” என்றும், கீழ்ப்பாகத்தில் “விடுதலைச் சிறுத்தைகள்” என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ இலச்சினை
VCK Flag

கொடி & தத்துவ விளக்கம்

நீலமும் சிவப்பும் கலந்த இருவண்ணங்கள். மேல் பகுதியில் வானத்தின் நீலம், கீழ்ப்பகுதியில் குருதியின் சிவப்பு. நடுவே 5 முனைகளைக் கொண்ட வெள்ளை விண்மீன்.

🔵 நீலம்: உழைக்கும் மக்களின் விடுதலை
🔴 சிவப்பு: புரட்சிகர நடவடிக்கைகள்
⭐ விண்மீன்: விடியலின் விடிவெள்ளி

கொள்கை கோட்பாடுகள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியில் ஒளிரும் விண்மீனின் ஐந்து முனைகள் பிரதிபலிக்கும் முதன்மையான லட்சியங்கள்:

1

சாதி, மதம் ஒழித்து சமத்துவம் படைப்போம்.

2

வர்க்க அமைப்பை உடைத்து அடித்தட்டு மக்களின் வறுமையைத் துடைப்போம்.

3

மகளிர் விடுதலை வென்று பெண் சமத்துவ மாண்பினைக் காப்போம்.

4

தேசிய இன உரிமைகள் மீட்டு, உண்மையான ஐக்கியக் குடியரசு அமைப்போம்.

5

வல்லரசிய ஆதிக்கம் ஒழித்து மக்களின் முழு வாழ்வுரிமைகள் மீட்போம்.

வரலாற்றுப் பின்னணி: காலவரிசைப் பயணம்

1982 முதல் சமகாலம் வரையிலான எழுச்சிப் பாதை

“கடைசி மனிதர்களுக்கான அரசியல் கட்சி”

கடைசி மனிதர்களுக்கான அரசியல் கட்சியே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாகும். அதிகாரம் வர்க்கத்தாலும் சாதிய ஆதிக்கத்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே சுயமரியாதையையும், உரிமை உணர்வையும், ஜனநாயக வழியிலான போராட்ட குணத்தையும் ஊட்டி வளர்த்த ஒப்பற்ற மக்கள் பேரியக்கம் இது.

1982 மதுரை தமுக்கம் மைதானம்

பாரதிய தலீத் பாந்தர் இயக்கம் தொடக்கம்

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் துணைவியார் அன்னை சவீதா அம்பேத்கர் தலைமையில் தமிழ்நாட்டில் தலீத் பாந்தர்ஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. வழக்கறிஞர் அ.மலைச்சாமி அவர்கள் மாநில அமைப்பாளராகப் பொறுப்பேற்று களப்பணிகளை முன்னெடுத்தார்.

1989 வரலாற்றுத் திருப்புமுனை

அமைப்பாளர் அ.மலைச்சாமி மறைவு & தோழர்களின் அழைப்பு

அமைப்பாளர் அ.மலைச்சாமி அவர்களின் மறைவைத் தொடர்ந்து, அவரது வீரவணக்க நினைவேந்தலில் கூடிய ஆயிரக்கணக்கான தோழர்கள், மதுரையில் தடய அறிவியல் துறை அலுவலராகப் பணியாற்றி வந்த இளம் சிந்தனையாளர் தொல்.திருமாவளவன் அவர்களைத் தலைமை ஏற்றுப்பபடி கேட்டுக்கொண்டனர்.

1990 சனவரி 21 தலைமைப் பொறுப்பேற்பு

தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை & பெயர் மாற்றம்

அரசுப் பணியைத் துறந்து மக்கள் தொண்டே வாழ்க்கை என முடிவெடுத்த தலைவர் தொல்.திருமாவளவன் முறைப்படி இயக்கப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அமைப்பு 'இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்' எனப் பெயர் மாற்றப்பட்டது.

1990 ஏப்ரல் 14 மதுரை கோ.புதூர்

முதல் கொடியேற்றம் & வரலாற்று முழக்கம்

புரட்சியாளர் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டி, மதுரை கோ.புதூர் பேருந்து நிலையம் அருகே இயக்கத்தின் நீல-சிவப்பு கொடியை ஏற்றிவைத்த தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், “இன்று எமது இயக்கக் கொடி! நாளை நமது தேசியக் கொடி!” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சூளுரையை முழங்கினார்.

“அடங்க மறு! அத்துமீறு! திமிறி எழு! திருப்பி அடி!” — புதிய புரட்சிப் போர்க்குரல் பிறந்தது.
1991

‘விடுதலைச் சிறுத்தைகள்’ எனப் பெயர் பிரகடனம்

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டத்தை எல்லைகள் கடந்து விரிவுபடுத்தும் நோக்கில் அமைப்பு அதிகாரப்பூர்வமாக 'விடுதலைச் சிறுத்தைகள்' என்ற கம்பீரப் பெயருடன் தன் பணிகளைத் தொடங்கியது.

1990 – 1999

தேர்தல் புறக்கணிப்பு & தீவிர களப்போராட்டங்கள்

"வாக்குச்சாவடி அல்ல, வாழ்க்கைச்சாவடி" என்ற முழக்கத்தோடு தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. கிராமப்புறங்களில் நிலவிய சாதிய தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, நிலவுடைமை ஆதிக்கங்களுக்கு எதிராக சமரசமற்ற நேரடிக் களப்போராட்டங்கள் வழி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆற்றலாக எழுச்சி பெற்றது.

1999

சனநாயக தேர்தல் அரசியல் பிரவேசம்

மக்கள் பிரதிநிதித்துவ அவைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற வரலாற்றுத் தேவையை உணர்ந்து தமாகா கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் களம் கண்டது. சிதம்பரம் மற்றும் பெரம்பலூர் தொகுதிகளில் லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்று ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

2001

சட்டமன்றத் தேர்தல் வெற்றி & தலைவர் எம்.எல்.ஏ

திமுக கூட்டணியில் மங்களூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக முதல்முறையாக வெற்றி பெற்றார்.

2004

மக்கள் கூட்டணி முன்னெடுப்பு

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு 2.57 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று விடுதலைச் சிறுத்தைகளின் தனிநிகரற்ற அடித்தள வலிமையை மெய்ப்பித்தது.

2006 மார்ச் 2 இந்தியத் தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகப் பதிவு

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் இந்திய அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியாகப் பதிவு செய்து முழு பரிமாண மக்கள் சனநாயக இயக்கமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

2006 & சமகால மக்கள் ஆதரவு

சட்டப்பேரவை பிரதிநிதித்துவமும் மற்றும் தொடர் சாதனைகள்

2006 சட்டமன்றத் தேர்தலில் மங்களூர் தொகுதியில் தோழர் கு.செல்வப்பெருந்தகை, காட்டுமன்னார்குடி தொகுதியில் தோழர் து.இரவிக்குமார் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக அமோக வெற்றி பெற்றனர். உள்ளாட்சித் தேர்தல்களிலும் நகராட்சி, பேரூராட்சிகளில் மக்களுக்கான மக்கள் ஆதரவை வென்றெடுத்த கட்சி, சமகாலத்தில் மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி தத்துவத்தின் முன்னணி அரணாகத் திகழ்கிறது.

⚖️ கட்சியின் கொள்கை அடித்தளம்

“புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சமூக, அரசியல், பொருளாதார கொள்கைகளை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தமது அரசியல் கொள்கைகளாக ஏற்றுக்கொண்டு, தந்தை பெரியார் அவர்களின் வழிகாட்டல்களின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூக மக்களை அரசியல் படுத்துவதையும், அமைப்பாக்குவதையும் கடமையாகக் கொண்டு செயலாற்றி வருகிறது.”

📚 கூடுதல் ஆவணங்கள் & பார்வை

அதிகாரப்பூர்வ தொகுப்புகள்

⚖️

சட்டம் & விதிகள்

கட்சியின் கட்டமைப்பு, உறுப்பினர் பொறுப்புகள், நிர்வாகக் குழுக்களின் நெறிமுறைகள் மற்றும் அமைப்பு விதிகள்.

📖

தலைவரின் நூல்கள்

‘அடங்க மறு’, ‘அமைப்பாய் திரள்வோம்’, ‘எழப் பணிப்போம்’ உள்ளிட்ட எழுச்சித் தமிழரின் சிந்தனைப் படைப்புகள்.

📰

தமிழ்மண் மாத இதழ்

மாதந்தோறும் வெளிவரும் கருத்தியல் மற்றும் அரசியல் ஆவண இதழ். முந்தைய இதழ்களை வாசிக்கவும் சந்தா செலுத்தவும்.