Home செய்திகள் காளிதாஸ் திருமண நிகழ்வில் பங்கேற்க தலைவர் திருமாவிற்கு நடிகர் ஜெயராம் நேரில் அழைப்பு

காளிதாஸ் திருமண நிகழ்வில் பங்கேற்க தலைவர் திருமாவிற்கு நடிகர் ஜெயராம் நேரில் அழைப்பு

8
0

நடிகர் ஜெயராம் தன் மகன் காளிதாஸ் ஜெயராம் திருமண நிகழ்வில் பங்கேற்க கோரி தலைவர் திருமாவிற்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்றவர். பின்னர் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பா.ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’, கமலின் ‘விக்ரம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர் பிரபல மாடல் தாரிணி காலிங்கராயர் என்பவரை காதலித்து வந்தார். பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்கள் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடைபெற்றது.

இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் திருமணம் நவம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தலைவர் திருமா அவர்களை நேரில் சந்தித்து நடிகர் ஜெயராம் அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here