Home அறிக்கைகள் போப் ஆண்டவர் மறைவு:உலக அமைதிக்காகவும் சனநாயகத்திற்காகவும் போராடும் சக்திகளுக்கு நேர்ந்த பேரிழப்பு!

போப் ஆண்டவர் மறைவு:உலக அமைதிக்காகவும் சனநாயகத்திற்காகவும் போராடும் சக்திகளுக்கு நேர்ந்த பேரிழப்பு!

10
0
போப் ஆண்டவர் மறைவு:
———————————-
உலக அமைதிக்காகவும்
சனநாயகத்திற்காகவும் போராடும் சக்திகளுக்கு நேர்ந்த பேரிழப்பு!
——————————————
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
———————————————————
போப் ஆண்டவர் அருட்திரு.ஃபிராசிஸ் (88)அவர்களின் மறைவு துயரமளிக்கிறது. உலக அமைதிக்காக அவர் ஆற்றியுள்ள பங்களிப்புகள் போற்றுதலுக்குரியது. அண்மையில், ஈஸ்டர் நாளன்று அவர் ஆற்றிய உரை காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடைபெறும் இனக்கொலை குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். காஸாவின் மீது இஸ்ரேல் நடத்தும் கொடூரமான கொலைவெறி யுத்தத்தை உடனே நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். உடல் நலிவுற்ற நிலையிலும் உலக அமைதியை நிலைநாட்டுவதற்காக அவர் பொறுப்புணர்வோடு ஆற்றிய உரை இந்நேரத்தில் நினைவுகூர்ந்திட வேண்டியது நம்முடைய நன்றிக்கடனாகும்.
அவரது மறைவு கிறித்தவர்களுக்கு மட்டுமின்றி “சகோதரத்துவம் மற்றும் உலக அமைதி” ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் நேர்ந்த ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
மறைந்த போப் ஆண்டவர் அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here