Home அறிக்கைகள் சம்பலில் சிறுபான்மை சமூகத்தினரின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

சம்பலில் சிறுபான்மை சமூகத்தினரின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

13
0

“உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜித்தின் கீழே இந்துக் கோயில் இருந்ததா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வுப்பணிகளை உடனே நிறுத்த வேண்டும்”

என உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் கடிதம் அளித்து வலியுறுத்தியுள்ளேன்.
~~~~~~~~

“1. வன்முறை மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991ஐப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் சம்பல் ஜாமா மஸ்ஜித்தில் அனைத்து ஆய்வு நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்.

2. சம்பலில் சிறுபான்மை சமூகத்தினரின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

3. நவம்பர் 24 சம்பவங்கள், குறிப்பாக போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் காவல்துறையின் தவறான நடத்தைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு சுயேச்சையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

4. சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும் தேசத்தின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளைத் தடுப்பதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக ஒன்றிய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் .”

என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here