மாமனிதர் புரட்சியாளர்
அம்பேத்கர் அவர்களின்
அளப்பரிய பேருழைப்பால்
வடித்து வகுத்தளிக்கப்பெற்ற
இந்திய அரசமைப்புச் சட்டம்
அரங்கேற்றப்பட்ட நாளான
நவம்பர் 26 அன்று
அச்சட்டத்தின் அடிப்படைக் கூறுகளான
” நீதி, சுதந்திரம், சமத்துவம் , சகோதரத்துவம் ”
ஆகியவற்றை நீர்த்துப் போகாமல் பாதுகாத்திடவும் —
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்
கண்ட கனவைநனவாக்கும் வகையில், பிறப்பினடிப்படையிலான உயர்வு-
தாழ்வு என்னும் சனாதன பாகுபாடுகள் இல்லாத,
ஒரு புதிய சனநாயக இந்தியாவைக் கட்டமைத்திடவும்
உளப்பூர்வமாக உறுதியேற்கிறோம்.
அரசமைப்புச் சட்டம் என்னும்
அம்பேத்கர் சட்டமானது,
மனுஸ்மிருதி என்னும் மனுச்சட்டத்திற்கு
நேர் எதிரானதாகும்.
எனவே, அம்பேத்கர் சட்டத்திற்கு
இன்று மனுவாத சக்திகளால்
பேராபத்து சூழ்ந்துள்ளது.
மிகப்பெரும் கேடான
இச்சூழலிலிருந்து அரசமைப்புச்
சட்டத்தைப் பாதுகாப்பதே
புதிய சமத்துவ இந்தியாவைக்
கட்டமைப்பதற்கான ஒரே வழியாகும்.
அதற்கு இந்திய அளவில்,
சனாதன சக்திகளைத்
தனிமைப் படுத்தவும்;
சனநாயக சக்திகளை
அய்க்கியப்படுத்தவும்,
வரலாற்றுச் சிறப்பு மிக்க
இந்நாளில் உறுதியேற்கிறோம்.
—@@@@@@@—-