புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் குறித்து திரு.ஆனந்த் டெல்டும்டே அவர்கள் எழுதியுள்ள ஆங்கில நூலான “ஐகனோக்ளாஸ்ட்” (ICONOCLAST) என்னும் நூல் வெளியீட்டு விழாவில் அம்பேத்கர் திடலில் இன்று நடைபெற்றது. புரட்சியாளர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை இடதுசாரி சிந்தனைப் பார்வையில் ஆனந்த் டெல்டும்டே படைத்துள்ள இந்நூலை வெளியிட்டேன். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ரவிக்குமார் , ஏ.எஸ்.பன்னீர்செல்வம் , விஜய்சங்கர் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பேரனும் இந்நூலின் ஆசிரியருமான ஆனந்த் டெல்டும்டே அவர்கள் ஏற்புரை ஆற்றினார் .