சனாதன எதிர்ப்புப் போராளி சமூகநீதிப் பேரரண் வி. பி.சிங் அவர்களின் நினைவு நாளில் நன்றிப் பெருக்கோடு அவரை நினைவுகூர்ந்து அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
இந்தியப் பேரரசின் ஆட்சியதிகாரம் என்னும் பேரதிகாரத்தை சங்பரிவார்களின் மேலாதிக்கத்துக்குப் பலிகொடுத்து மண்டல் பரிந்துரையை நிறைவேற்றிச் சமூகநீதியைப் பாதுகாத்த மாமனிதர் வி.பி.சிங் அவர்களின் ஈகம் வெல்லும். சனநாயகம் நிலைபெறும்.
சனாதன எதிர்ப்புப் போராளி சமூகநீதிப் பேரரண் வி.பி.சிங் அவர்களின் நினைவு நாளில் நன்றிப் பெருக்கோடு அவரை நினைவுகூர்ந்து மாநிலக் கல்லூரியில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினேன்.